ஊறவைத்த பாதாம் உடலுக்கு நல்லதா.. ஆய்வில் கூறிய உண்மை
பாதாமை இரவில் தண்ணீரில் ஊறவைத்து இதை காலையில் உண்ணுதல் உடலுக்கு நன்மை தருமா என்பதை ஆய்வில் மூலம் கூறியுள்ளனர்.
பெரும்பாலான மக்கள் ஊறவைத்த பாதாம் உண்ணுவது வழக்கம். பாதாமில் நிறைய சத்துக்கள் காணப்படுகிறது.இதில் உள்ள பைட்டிக் ஆசிட் எனப்படம் வேதிப்பொருள் இருப்பதால் இது உடலில் பல நன்மைகளை தருகிறது.
இதை அசைவ உணவு அதிகம் சாப்பிடாதவர்கள் இந்த அசைவஉணவில் உள்ள சத்துக்களை எடத்துக்கொள்ள இந்த பாதாமை உண்ணலாம். அந்த அளவிற்கு இதில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
இரவில் தண்ணீரில் பாதாமை ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் தண்ணீரை வடிய வைத்துவிட்டு ஊறிய பாதாமை பலர் உட்கொள்கின்றனர்.
இவ்வாறு ஊற வைத்து தண்ணீரை வடிக்கட்டிய பின்னர் சாப்பிடுவதால் ஊறவைத்த பாதாம் கொழுப்பு உணவுகளில் செயல்படும் லிப்பிட்-பிரேக்கிங் என்சைம் லிபேஸை வெளியிடுகிறது.
மற்றும் ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனைகளை குறைக்கிறது மற்றும் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
பாதாமில் உள்ள பொட்டாசியம், புரதம் மற்றும் மெக்னீசியம் உங்கள் இதயத்தின் ஆரோக்கியமான துடிப்புக்கு சிறந்தது. இது இருதய நோய்களின் அபாயத்தைக் குறைத்து, உங்கள் இதய ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே ஊறவைக்காத பாதாமை விட ஊறவைத்த பாதாம் சிறந்தது.