உடல் எடையை அதிகரிக்கும் காய்கறிகள் என்னனு தெரியுமா.. இது தெரியாம போச்சே!
இந்த பதிவில் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள் ஒரு பக்கம் இருக்க உடல் எடையை அதிகரிக்கும் காய்கறிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தது காய்கறிகள் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது தான் ஆனால் இது உடல் எடை அதிகரிக்கும் உணவு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் படி பச்சை பட்டாணி, சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் சோளக்கதிர் போன்ற உணவுகள் விரைவாக உடல் எடையை அதிகரிக்கும்.
இதற்கான காரணம் இந்த காய்கறிகளில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் காணப்படுகின்றது. இதை தவிர கொழுப்பு மற்றும் புரதச்சத்து இதில் காணப்படாது. இதன் மூலகங்களாக காணப்படுவது ஆன்டி-ஆக்சிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்களாகும்.
இதனால் இது உடலுக்கு அதிகளவான ஊட்டச்சத்தை வழங்குகிறது. எனவே உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மட்டும் இந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல் எடை குறைப்பவர்கள் இந்த காய்கறிகளை உணவில் தவிர்த்துக் கொள்வது நன்மை தரும். இது தவிர நீங்கள் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்.