ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்

கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டால் முன்கூட்டியே இந்த அறிகுறிகள் காட்டுமாம்!

கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்வரை, அதன் முக்கியத்துவம் நமக்கு புரிவதில்லை. கல்லீரல் உடலில் 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை செய்கிறது. இதன் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது.

கல்லீரல் உடலின் மிக மக்கியமான பகுதியாகும். ஆனாலும் இந்த உறுப்பை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இதன் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். கல்லீரல் உடலில் 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை செய்கிறது.

கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டால் முன்கூட்டியே இந்த அறிகுறிகள் காட்டுமாம்! | Liver Damage Fatigue Loss Stomach Pain Yellow Skinநச்சுகளை வடிகட்டுதல், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல் மற்றும் புரதங்களை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். இன்றைய கால கட்டத்தில் நமது உணவுமுறை பழக்க வழக்கத்தால் கல்லீரல் பாதிப்படையக்கூடிய வாள்ப்புகள் அதிகமாக காணப்படகின்றது.

இந்த கல்லீரல் பாதிப்படைந்தால் இது சில அறிகுறிகளை காட்டும். இதன்போது நாம் வைத்தியரிடம் ஆரொசனை பெறுவது அவசியம். ஓய்வு எடுத்த பின்னரும் சரியாகாத அதிகப்படியான சோர்வு கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டால் முன்கூட்டியே இந்த அறிகுறிகள் காட்டுமாம்! | Liver Damage Fatigue Loss Stomach Pain Yellow Skinசேதமடைந்த கல்லீரல் உடலுக்கு ஆற்றலை வழங்க போதுமான புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்ய முடியாததால் இது நிகழ்கிறது.நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிட்டாலும் எடை குறைவது பாதிப்படைந்த கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம்.

எடை இழப்பு மற்றும் பசியின்மை கல்லீரல் பிரச்சனையின் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன. சேதமடைந்த கல்லீரலால் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாது என்பதால் இது நிகழ்கிறது.

இதை தவிர வயிற்றின் மேல் வலது பகுதியில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படுவது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். இந்த வலி லேசான வலியாகவும் இருக்கலாம், அல்லது தீவிர வலியாகவும் இருக்கலாம்.

உங்கள் தோல் மற்றும் உங்கள் கண்களின் வெள்ளை நிற இடங்கள் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பித்தால், அதை கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறியாக கருத வேண்டும். இரத்தத்தில் பிலிரூபின் என்ற பொருளின் அளவு அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker