முடி உதிர்வை குறைக்கும் முயல் ரத்த எண்ணெய்
மனிதர்களை தினம் தினம் வாட்டி வதைக்கும் இந்த முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு வழங்க முயல் ரத்த எண்ணெயை எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் அதில் என்னென்ன நன்மை கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
தற்பொத முடி கொட்டும் பிரச்சனையானது ஆண் பெண் என இருபாலாருக்கும் ஒரு தீராத பிரச்சனையாக இருந்து வருகின்றது. முடி உதிர்விற்கு தீர்வாக பலர் முயலின் இரத்தத்தை வைத்து எண்ணெய் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த எண்ணையில் கண் எரிச்சல் பிரச்சனையை சரி செய்யப்படுவதோடு கண்களின் திறனை மேம்படுத்தப்படுகின்றது. இந்த எண்ணெய் குளிர்ச்சியாக இருப்பதால் உடல் சூட்டினால் முடி உதிர்வது குறையும்.
முடி வளர்ச்சிக்கு தேவையான,லைசின், மெத்தியோனின், சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்கள் முயல் இரத்தத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணெயில் உள்ளதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் முடியின் வேர்க்கால்களை பலமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. முடி உடைந்து போகாமல் பளபளப்பாக இருப்பதற்கு இந்த முயல் ரத்த எணடணெய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.