Daily அவிச்ச முட்டை சாப்பிடுவீங்களா.. அப்போ இந்த பிரச்சினை வரும் – ஜாக்கிரதை
பொதுவாக ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதும் கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இது ஒருவரின் BMI மற்றும் உயரம் மற்றும் உடல்வாகு என்பவற்றை அடிப்படையாக கொண்டு கொலஸ்ட்ரால் அளவு தீர்மானிக்கப்படுகிறது.
மனித உடலில் கொலஸ்ரோல் அளவு கொழுப்பை விட அதிகமாக இருந்தால் உடலில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் வரலாம். இவற்றை தடுப்பதற்காகவே கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவாக உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அந்த வகையில் முட்டை அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. டயட் பிளானில் இருப்பவர்கள் முட்டை அத்தியாவசிய உணவுகளில் ஒன்றாக எடுத்து கொள்வார்கள். இது சில வேளைகளில் கெட்ட கொலஸ்ட்ராலின் உற்பத்தியை அதிகரிக்கலாம். இதனால் முட்டை சாப்பிடும் போது எண்ணிக்கையில் கவனமாக இருக்க வேண்டும்.
2. ஊட்டச்சத்து நிபுணர்களின் வெளியிட்ட கூற்றின்படி, முட்டை நிறைவான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பல்வேறு வகையில் எமக்கு உதவிச் செய்கின்றன. முட்டை ஒரு நிறைவான புரோட்டீன் உணவு என ஆய்வுகள் கூறுகிறது.
3. குறைவான அளவு இரத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு முட்டை தாரளமாக சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் அமினோ அச்சிட் மற்றும் மினரல்கள் அனீமியா பாதிப்பு உள்ளவர்களை குணமாக்கும்.
4. முட்டையில் ஆக்ஸிஜனேற்றப்பட்டு தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. தினமும் சாப்பிடும் பொழுது சில வேளைகளில் பாதிப்பு ஏற்படலாம்.
5. டயட் பிளானில் இருப்பவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளைகருவை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பற்றிய எந்த பயமும் தேவையில்லை.