வீடே மணமணக்கும் மஷ்ரூம் கொத்து கறி எப்படி செய்யலாம் தெரியுமா..
வீட்டில் ஆரோக்கியமான உணவு செய்வதென்றால் எல்லோரும் விரும்ப மாட்டார்கள். இதுவே சுவையான உணவு என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
மஷ்ரூமை வைத்து எப்படி கொத்து மசாலா செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்கலாம். அப்படியான ஒரு உணவுதான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
- வரமல்லி – ஒரு ஸ்பூன்
- பட்டை – 1
- கிராம்பு – 4
- ஏலக்காய் – 1
- சோம்பு – ஒரு ஸ்பூன்
- மிளகு – ஒரு ஸ்பூன்
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- ஸ்டார் சோம்பு – 1
- வர மிளகாய் – 4
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- முந்திரி – 10
- கசகசா – ஒரு ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
- சோம்பு – கால் ஸ்பூன்
- கறிவேப்பிலை
- தக்காளி – 1 பொடியாக நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- கஷ்மீரி மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
- மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
செய்யும் முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு தாளிக்கவேண்டும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்க்க வேண்டும்.
இந்த வறுத்த பொருட்களின் பச்சை வாசனை போனவுடன் இந்த பொடிகளை சேர்க்கவேண்டும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, அரைத்து வைத்துள்ள மசாலாப்பொடி என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
இதன் பின்னர் பொடியாக நறுக்கிய காளான் சோத்து வதக்கி கொள்ள வேண்டும். இதன் பின்னர் கடைசியாக மல்லித்தழை மேலால் போட்டு இறக்கினால் மஷ்ரூம் மசாலா கொத்துக்கறி தயார்.