முடிக்கு எப்படி முட்டை வைத்து ஹெயார் பெக் செய்யலாம் தெரியுமா..
அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெறுவதற்கு தலைமுடியில் முட்டையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
மஞ்சள் கருக்களை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்றாக கலந்து தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து நல்ல வாசனை கொண்ட ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்.
இப்படி பயன்படுத்தும் போது தேனும் பயன்படுத்தலாம். இதனால் வறண்ட தலைமுடி பொலிவாக மாறுகிறது. மயிர்க்கால்களில் அடிக்கடி அரிப்பு மற்றும் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்கள் முட்டையின் மஞ்சள் கருவோடு வேப்ப எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்.
இது ஒரு இயற்கை தீர்வாக அமைகிறது. பாதாம் எண்ணெயுடன் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக கலந்து தலைமுடியில் பயன்படுத்த வேண்டும். இதனால் நீண்ட மற்றும் வலிமையான முடியை பெற முடியும்.
2 முட்டைகளுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து பயன்படுத்துவது ஒட்டுமொத்த தலைமுடியின் வளர்ச்சிக்கு பங்களித்து, தலைமுடியின் ஈரப்பதத்தை தக்க வைத்து, ஆரோக்கியமான தலைமுடியை பராமரிக்க உதவுகிறது.
மழைக்காலங்களில் இந்த ஹெர் பெக்குகளை போடுவதை தவிர்க்கவும். முட்டையை வைத்து செய்யப்படும் இந்த ஹேர் பெக்குகளால் அரிப்பு அகற்ற பெரிதும் உதவி செய்யும். சைனஸ் பிச்சனை இருப்பவர்கள் இந்த பெக்குகளை போட கூடாது.