முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா.. தக்காளியை இப்படி பயன்படுத்துங்க
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தங்களை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
குறிப்பாக பெண்கள் முகத்தை எப்போதும் பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகமாக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்கின்றனர்.
இருப்பினும் சூழல் மாசு மற்றும் அதிக வெயில் போன்ற காரணங்களினால் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும் நிலை ஏற்படுகின்றது.
இதனை சீர்செய்ய கடைகளில் கிடைக்கும் ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதனால் பல்வேறு சரும பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.
அதனை சீர் செய்ய வீட்டிலேயே இயற்கையாக கிடைக்கும் தக்களியை கொண்டு செய்யப்பட்ட ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் ஒரு தக்காளியை எடுத்து நன்றாக பேஸ்ட் செய்து, அதனுடன் சிறிது ஓட்ஸ் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து, இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை உலரவிட வேண்டும்.
அதன் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் இயற்கையாகவே உடனடி பொலிவு பெறும்.
தக்காளி ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவுவது சருமத்துளைகளை சுத்தம் செய்ய உதவுகிறது.முகப்பரு பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தக்காளியை பயன்படுத்தினால் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
சருமத் துளைகளால் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும். இது ஒருவரின் முகத்தை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும்.
இதனைத் தவிர்க்க, தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும்.
முகத்தின் நிறத்தை இயற்கையாக அதிகரிக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு இந்த தக்காளி ஃபேஸ் பேக் மிகவும் துணைப்புரியும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்திவந்தால் கண்கூடான வித்தியாசத்தை அவதானிக்க முடியும்.