செலவே பண்ணாமல் சருமத்தை ஜொலிக்க வைக்கணுமா.. இந்த ஒரு பொருள் போதும்
பொதுவாகவே எல்லா பெண்களும் முகத்தை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதனை சீர்குலைக்கும் வகையில் சில பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் தன்மை அதிகமாக இருக்கும்.
இதனால் என்னதான் நல்ல மேக்கப் பொருட்களை பயன்படுத்தினாலும் குறுகிய நேரத்திலேயே முகம் சோர்வாகவும் பொலிவிழந்தும் காணப்படும்.
இந்த பிரச்சினைக்கு பணத்தை அதிகமாக செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் ஒரு எளிமையான பொருளை கொண்டு எவ்வாறு சிறந்த தீர்வை பெறலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சருமத்தை குளிர்ச்சியாக வைக்க ஐஸ்கட்டியைப் பயன்படுத்துவதே ஐஸ்கட்டி ஃபேஷியல் ஆகும்.சரும மருத்துவர்களின் கூற்றுபடி முகம் மற்றும் சருமத்துக்கு ஐஸ்கட்டியை பயன்படுத்தி மசாஜ் செய்வது சருமத்துக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
ஐஸ் கட்டிகளை எடுத்து மென்மையான பருத்தி துணியில் வைத்து முனைகளை மடித்து, மூடிய ஐஸ் கட்டிகளால் உங்கள் முகத்தையும் உடலையும் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதற்கு கைகுட்டைகளையும் கூட பயன்படுத்தலாம்.
இந்த ஐஸ்கட்டிகளை கொண்டு குறைந்தது 2நிமிடங்கள் வரை முகம் மற்றும் சருமத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு கன்னங்கள், மூக்கு,நெற்றி, தாடை மற்றும் உதடுகளைச்சுற்றிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த ஐஸ்கட்டி ஃபேஷியல் செய்வதற்கு எந்த செலவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற போதிலும் இது மிகவும் வினைத்திறனாக செயற்பட்டு சரும பிரச்சினைகளை விரைவில் குணப்படுத்தி பொலிவான சருமத்தை கொடுக்கின்றது.
சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் எண்ணெய் போன்றவற்றை நீக்கி சருமத்தை புத்துணர்வுடன் வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
ஐஸ்கட்டி ஃபேஷியலின் மூலம் சரும துளைகள் சுத்தமாகவும் இறுக்கமாகவும் மாறும். இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை உருவாவது தடுக்கப்படுகின்றது. ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது, சருமத்தின் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கிறது.
இதனால் நாம் பயன்படுத்தும் அனைத்து சர்ம பராமரிப்பு பொருட்களும் நன்கு உறிஞ்சப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது.
காலையில் எழுந்தவுடன் ஐஸ்கட்டியை கொண்டு சருமத்தை மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் இருந்து வழியும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்த முடியும்.
ஐஸ்கட்டி ஃபேஷியலை தொடர்ந்து செய்து வருவதால் சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படுவது தாமதமாகும். இதனால் என்றும் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ளலாம்.