பத்தே நிமிடத்தில் பூண்டு சட்னி: இப்படி ஒருமுறை செய்து பாருங்க
பொதுவாகவே காலை உணவுக்கு பெரும்பாலானவர்கள் இட்லி, தோசை செய்வது வழக்கம்.
இட்லி, தோசைக்கு தொட்டுக்க சாதாரணமாக தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி தான் செய்வோம்.
கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்ததால்… இந்த பூண்டு சட்னியை முயற்ச்சி செய்து பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
வரமிளகாய் – 10
பூண்டு – 100 கிராம்
கறிவேப்பிலை – 6 கொத்து
புளி – 1 சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில் பூண்டு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து சுருங்கும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் புளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, தண்ணீர் ஊற்றாமல் கொரகொர பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் ஊற்றி கிளறினால் பூண்டு சட்னி தயார்.
இந்த சட்னியின் சுவையும் மணமும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.