ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

கமகம மாம்பழ கேசரி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா.. ரெசிபி இதோ

கோடையில் கிடைக்கக்கூடிய மாம்பழங்களை வைத்து எல்லோருக்கும் பிடித்தமான மாம்பழக்கேசரியை செய்து பார்க்கலாம்.

மாம்பழத்தில் சதை நிரம்பி ஒரு அற்புதமான பழமாக காணப்படுகிறது. இந்த கேசரி ரெசிபியை வெறும் 15 நிமிடத்தில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • மாம்பழம் – 1
  • ரவை – 2 கப்
  • பால் – 2 கப்
  • சர்க்கரை – 2 கப்
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி – 10
  • உலர் திராட்சை – 10
  • தண்ணீர் – 2 கப்

செய்யும் முறை

முதலில் மாம்பழத்தின் சதையை எடுத்து மிக்ஸியில் அரைத்து தனியே எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து நெய் ஊற்றி அதில் ரவை பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே கடாயில் சிறுதளவு நெய் ஊற்றி முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு ஒரு நிமிடம் மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் மாம்பழக்கூழ், சர்க்கரை, பால் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அடுப்பில் வைத்து குறைத்த தீயில் சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை நன்கு கிளறிவிடவும்.

கமகம மாம்பழ கேசரி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? ரெசிபி இதோ | Food Delicious Mango Kesari Recipeபின்னர் கடாயை அடுப்பில் வைத்து அதை சூடாக்க வேண்டும். ரவை நன்றாக வேகியதும் தண்ணீர் வற்றும் சந்தர்ப்பத்தில் மாம்பழக் கூழ் கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும்.

கமகம மாம்பழ கேசரி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? ரெசிபி இதோ | Food Delicious Mango Kesari Recipe

இதை கெட்டியாக ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி அதனுடன் வறுத்து முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து கலந்துகொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மாம்பழ கேசரி சாப்பிட தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker