குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன்ரோல்
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன்ரோல்
தேவையான பொருட்கள் :
1/4 கிலோ சிக்கன்
2 பெரிய வெங்காயம்
1 டீஸ்பூன் சோம்பு
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் தூள்
கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
1 கப் மைதா மாவு
1 முட்டை
1/2 கப் பிரட் தூள்
1 டீஸ்பூன் மிளகு தூள்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
ஒரு குக்கரில் சிக்கன்னை சேர்த்து அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகுத்தூள் சேர்த்து இரண்டு விசில்விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில்என்னை சேர்த்து சோம்பு எடுத்துக் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிய பிறகு மிளகாய் தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அரை டீஸ்பூன் மிளகு தூள்சேர்த்து வதக்கியும் வேக வைத்துள்ள சிக்கனை நன்றாக சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்
அனைத்தும் சேர்ந்து வந்ததும் அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
ஒரு மிக்ஸி ஜாரில் மைதா மாவு முட்டை சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைத்துஎடுத்துக் கொள்ளவும்
ஒரு தோசை கல்லில் கலந்து வைத்துள்ள மாவை லேசாக தோசை பதத்திற்கு ஊற்றி இரு பக்கமும் வேக வைத்துஎடுக்கவும்
ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா மாவுடன் தண்ணீர் கலந்து வைக்கவும்
சுட்டு வைத்துள்ளதோசைகள் சிக்கன் கலவையை சேர்த்து மைதா மாவில் உதவியுடன் அதனை முழுவதுமாக ஒட்டி எடுத்து மறுபடியும் மைதா மாவில் முக்கி பிரட் தூள் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்துஎடுத்தால் சுவையான சிக்கன் ரோல் தயார்.