ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவைமருத்துவம்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு தர்பூசணி மில்க்‌ஷேக்… வெறும் 5 நிமிடம் போதும்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க்ஷேக் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிடவும், நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. தர்பூசணியை மில்க்ஷேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

தர்பூசணி – அரை பழம்
பால் – அரை லிட்டர்
சர்க்கரை – தேவையான அளவு
பாதாம் பிசின் – 2 ஸ்பூன் சப்ஜா
விதை – 1 ஸ்பூன்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு தர்பூசணி மில்க்‌ஷேக்... வெறும் 5 நிமிடம் போதும் | Summer Scorching Sun Watermelon Milkshake

செய்முறை

தண்ணீர் பழத்தினை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு பாத்திரம் ஒன்றில் அதனை வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு, அதனுடன் அரை லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால் மற்றும் பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகளை சேர்த்து கலக்க வேண்டும்.

பின்பு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து குடித்தால் குளுகுளுவென வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க் ஷேக் தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker