முகத்தின் தோலை இறுக்கமாக்கி பொலிவாக்கும் ஃபேஸ் பெக்குகள் இதோ!
இந்த காலநிலை மாற்றத்தில் தோலை ஆரோக்கியமாக இறுக்கி சரும பளபளப்பை அப்படடியே தக்க வைத்திருக்கும் சில ஃபேஸ் பெக்குகளை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன அவை சருமத்தை இறுக்கமாக்கவும், நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கவும் உதவும்.
இந்த வெள்ளைக்கருவை முகத்தில் தடவி 15 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர், அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும் .
வாழைப்பழம் மற்றும் தேன் கலந்து அதை பெக்காக செய்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் விட்டு, பின்னர் தண்ணீரில் கழுவவும்.
பப்பாளியில் ஒரு பேஸ் பெக் செய்து அதை முகத்தில் பூசி அதை 15-20 நிமிடங்கள் விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
கற்றாழையை முகத்தில் தடவி உலர விட வேண்டும். பின்னர் சாதாரண நீரில் கழுவி அப்படியே விட்டால் வழக்கமான பயன்பாடு தோல் நெகிழ்ச்சி மற்றும் உறுதியை மேம்படுத்த உதவும்.