இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
பொதுவாக நம் எல்லோருக்கும் ஆரோக்கியமாக சாப்பிடுவதை விட சுவையாக சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.
இன்று கொடுத்திருக்கும் பதிவில் ஒரு புதுவிதமான சாப்பாடாக இருக்கும் தேங்காய்ப்பால் சாதம் தான் எல்லோருக்கும் செய்து காட்டப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
- அரிசி – 500 கிராம்
- பூண்டு – 20 பல்
- இஞ்சி – 4 துண்டுகள்
- பச்ச மிளகாய் – 4
- தேங்காய் பால் – 3 கப்
- நெய் – 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 80 மி. மீ
- பட்டை – சிறிய துண்டு
- கிராம்பு – 1 தேக்கரண்டி
- ஜாதிபாத்ரி – 1
- அன்னாசிப் பூ – 3
- கல்பாசி – 1தேக்கரண்டி
- ஏலக்காய் – 5
- சோம்பு – 1 தேக்கரண்டி
- உலர்ந்த வெந்தயக்கீரை – 1 தேக்கரண்டி
- மிளகு – 1 தேக்கரண்டி
- பிரிஞ்சி இலை – 2
- வெங்காயம் – 100 கிராம்
- நட்ஸ் வகைகள் – 100 கிராம்
செய்யும் முறை
முதலில் அரிசியை கழுவி 20நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸியில் பூண்டு இஞ்சி மிளகாய் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கெள்ள வேண்டும்.
பின்னர் நீங்கள் எடுத்த அரிசிக்கு ஏற்றவாறு தேங்காய்பாலை எடுத்து வைக்க வேண்டும். ஒரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் தேங்காய் எணணெயை உற்றி காய விட வேண்டும்.
இதன் பின்னர் பட்டை கிராம்பு ஜாதி பத்ரி அன்னாசி பூ கல்பாசி ஏலக்காய் சோம்பு உலர்ந்த வெந்தயக்கீரை பிரிஞ்சி இலை இவற்றை போட்டு வறுக்க வேண்டும்.
இதன் பின்னர் நறுக்கிய வெங்காயம் நட்ஸ் வகைகளை போட்டு தாழிக்க வேண்டும். இவை நன்றாக வறுபட்டதும் அதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்க வேண்டும்.
இதனுடன் ஒரு பொரிய தக்காளி வெட்டி சேர்க்க வேண்டும். இதன் பின்னர் தேங்காய்ப் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு அதன் பின்னர் அதில் உற வைத்த அரிசியை சேர்க்க வேண்டும்.
இதனுடன் புதினா இலை கொத்த மல்லி இலை சேர்த்து கொள்ளலாம். இந்த அரிசியை கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.