3 முட்டை இருந்தால் போதும்.. வெறும் 15 நிமிடத்தில் அசத்தலான காலை உணவு
காலை எப்பொழுது ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டு சலித்து போயிருக்கும் நபர்களுக்கு அசத்தலான வித்தியாசமான காலை உணவை இங்கு தெரிந்து கொள்வோம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டை பராத்தா சுலபமாக செய்து விடலாம். இதற்கு 3 முட்டையும், சப்பாத்தியும் இருந்தால் போதுமாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 1/2 கப்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு..
முட்டை – 3 (வேக வைத்தது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
வேக வைத்துள்ள முட்டையை துருவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் மஞ்சள், மிளகாய் தூள்கள், கரம்மசாலா, மிளகுத் தூள், சீரகத் தூள் உப்பு, கொத்தமல்லி இலைகளை போட்டு நன்றாக கிளறவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கையால் நன்கு சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
5 நிமிடம் ஆனதும், பிசைந்த மாவை உருண்டைகளாக பிரித்து, சப்பாத்திக்கு தேய்ப்பதை போன்று மெல்லியதாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு முட்டை மசாலாவை 2 ஸ்பூன் உள்ளே வைத்து, ஒரு பாகத்தில் அரை சப்பாத்தி அளவிற்கு வைத்து பரப்பிவிட்டு, பின்பு அதனை மடித்துக் கொள்ளவும்.
பின்பு ஃபோர்க் கரண்டியால் முனைப் பகுதியை அழுத்திவிட வேண்டும். பின்பு தோசை கல்லினை அடுப்பில் வைத்து அது சூடானதும் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும. எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை பராத்தா தயார்.