ஆரோக்கியம்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

நோன்பு திறக்கும் போது சாப்பிட வேண்டிய இப்தார் உணவுகள்

புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கின்றனர்.

‘தர்மத்தில் சிறந்தது எது?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அது ரமலானில் செய்யும் தர்மம் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.

ரமலான் மாதத்தில் தான் நபி அவர்கள் தங்களது கொடைத்தன்மையை விரிவுபடுத்தவும் செய்துள்ளார்கள்.

இம்மாதத்தில் செய்யும் நற்செயல்களுக்கான நன்மைகள் பல மடங்கு உண்டு, சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் இதுவே.

சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை பிரார்த்தனைகள், நன்மைகள் செய்யவும், நோன்பு நோற்கவும் செய்கிறார்கள்.

இந்த பதிவில் நோன்பு திறக்கும் போது அதாவது இப்தார் நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

சஹர் நேரத்தின் போதும், இப்தார் நேரத்தின் போதும் அளவுக்கு அதிகமாக உணவுகள் உட்கொள்வதை தவிர்த்து சரிவிகித சத்துக்கள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

முட்டை, பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், கோழி, ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகள், நார்ச்சத்து- விட்டமின் நிறைந்த பழங்கள், காய்கறிகளை அவசியம் எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்தார் நேரத்தின் போது, பேரீச்சம் பழம் எடுத்துக்கொள்வது வழமையான ஒன்று தான், கோடை காலம் என்பதால் தர்பூசணி, ஆரஞ்சு, பெர்ரி மற்றும் திராட்சை போன்ற பழங்களையும் தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.

தக்காளி, வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட்டை எடுக்கலாம், கேரட், பீன்ஸ் உட்பட காய்கறிகள் அடங்கிய சூப் உங்களுக்கான ஆற்றலை வழங்கும்.

முழு கோதுமை ரொட்டியுடன் பருப்புகள் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவும் நல்லது.

இதுதவிர காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட கோதுமை உணவுகள், முழு முட்டை, பயறு வகைகளுடன் தயாரான மாலை உணவு, சிக்கன் யோகர்ட் போன்றவையும் சிறந்ததே.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker