ஹேர் கலர் செய்தால் ஷாம்பூ பயன்படுத்தலாமா… தெரிஞ்சுக்கோங்க
முற்காலத்தில் எல்லாம் தலைமுடியை எண்ணெய் வைத்து ஆயுள்வேத பொருட்களை உபயோகித்து ஆரோக்கியமாக பாதுகாத்து வந்தனர்.
வயதாகிதும் வரக்கூடிய நரைமுடிக்கு டை பூசும் பழக்கத்தை கொண்டிந்தனர். ஆனால் தற்போது உள்ள நாகரீக வளர்ச்சியின் காரணமாக அனைவரும் தலைமுடிக்கு வண்ண வண்ண நிறத்தை பூசுகின்றனர்.
இது அழகாக இருந்தாலும் இதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இது பக்க விளைவுகளை உண்டாக்கும்.
அந்த வகையில் கலர் செய்த முடிக்கு ஷாம்பு பயன்படுத்தலாமா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடிக்கு நீங்கள் கலர் செய்தால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஷாம்பு பயன்படுத்த கூடாது. சுமார் 72 மணிநேரத்திற்கு முடியை ஷாம்பு கொண்டு அலச கூடாது.
இப்படி செய்தால் முடியோடு நிறம் நன்றாக ஒட்டி கொள்ளும். முடியை கலர் செய்ததும் உடனடியாக ஷாம்பூ கொண்டு அலசினால் முடியின் க்யூட்டிகல் நிறத்தோடு ஒட்டாமல் போகிறது.
இதன் விளைவாக, உங்கள் முடியின் நிறம் விரைவாக மங்கத் தொடங்கும். இதனால் கலர் செய்த பின்னர் முடியை கழுவதென்றால் ல்பேட் இல்லாத ஷாம்பூவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும், ரசாயனங்கள் மற்றும் தண்ணீரில் உள்ள குளோரின் ஆகியவற்றிலிருந்து முடியைப் பாதுகாக்க வடிகட்டிய நீரில் முடியை அலச வேண்டும்.
முடி கலர் செய்த பின் ஹேர் ட்ரையர் பயன்படுத்த கூடாது. சூரிய ஒளியில் இருந்தும் உங்கள் முடியை பாதகாத்து கொள்வது நல்லது.