கேரளா பெண்கள் போல் உடலை முழுவதுமாக அழகுபடுத்தணுமா..
ஆண்களை விட பெண்கள் தான் சருமத்தை அழகுபடுத்துவதில் ஆர்வமாக இருப்பார்கள்.
பொதுவாக கேரளப் பெண்கள் பார்லர் எதற்கும் போகாமல் இயற்கையான சில அழகுக்குறிப்புகள் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பார்கள்.
அந்த வகையில் சிலர் முகத்தை அழகுபடுத்துவார்கள், சிலர் உடலை அழகுப்படுத்துவார்கள். ஆனால் உடலை முழுவதுமாக எப்படி அழகாக வைத்திருப்பது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. முகத்தில் இருக்கும் முகப்பருக்கும் தலையில் வரக்கூடிய பொடுகுத்தொல்லைக்கும் சிறந்த இயற்கை வைத்தியமாக விளங்குவது வாழைப்பழ தோல் ஆகும்.
இந்த வாழைப்பழ தோலை பேஸ்ட் செய்து அதை உடல் முழுவதும் பூசி குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகுத்தொல்லையும் முகப்பருவும் உடலில் இருக்காது.
2.கண்ணின் இமைகள் அடர்த்தியாக வளர கண்ணை முதலில் சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர் ரோஸ் வாட்டர் போட்டு நன்றாக துடைக்க வேண்டும்.
இதற்கு பின்னர் ஆமணக்கு எண்ணெய் கொண்டு பூசி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்த பின்னர் மறுபடியும் ரோஸ் வாட்டர் கொண்டு துடைக்க வேண்டும்.
3. வெயிலில் அலைந்து திரியும் போது சருமம் கருமை நிறம் அடையும், இந்த கருமை நிறத்தை போக்குவதற்கு ஒரு கிண்ணத்தில் கோப்பியும் சக்கரை தயிர் இது மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ள வேண்டும்.
இதை 15 நிமிடங்கள் சருமத்தில் பூசி குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.
4.சருமத்தின் பொலிவை தக்க வைக்க தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக திராட்சை எலுமிச்சை போன்ற பழங்களை உண்ண வேண்டும். வெயில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்.