தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்கணுமா… இந்த சின்ன விஷயத்தை செய்தாலே போதும்
பொதுவாகவே அனைவரும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்யாமல் உணவு கட்டுப்பாடுகள் இன்றி இலகுவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர்
ஆனால் இது எந்தளவு சாத்தியம் மற்றும் ஆரோக்கியம் என்பது குறித்து பலரும் சிந்திப்பது கிடையாது.
ஆரோக்கியமான முறையில் அதிக நேரம் உடலை வருத்தாமல் நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்கும் பயிற்சி தான் நீச்சல் பயிற்சி.இதன் மூலம் கிடைக்கும் அலப்பரிய நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
நீச்சல் பயிற்சியின் நன்மைகள்
நீச்சல் பயிற்சியை வயது வேறுபாடு இன்றி அனைவரும் மேற்கொள்ள முடியும் கர்ப்பினி பெண்களும் கூட நீச்சல் பயிற்சி செய்வது மிகவும் நன்மை பயக்கும்.
சிறு வயதில் இருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் வலுவாகவும், ஆரோக்கியம் சீராகவும் இருக்கும்.
உடல் எடையை குறைப்பதில் நீச்சல் பயிற்சி முக்கிய இடம் வகிக்கின்றது. சராசரியாக ஒரு மணி நேரம் பெண்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது, அவர்களது உடலில் 400 கிலோ கலோரி எரிக்கப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.
தினமும் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கு, வயிற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கின்றது.
பிரசவத்துக்கு தயாராகும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் பிரசவ காலத்தில் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் நீங்கி சுகப்பிரசவத்துக்கான வாய்பை அதிகப்படுத்துகின்றது.
நீச்சல் நல்ல மூச்சுப்பயிற்சியாக அமைகிறது. அதன் மூலம் நுரையீரல் வலுப்பெற்று சுவாச பிரச்சினைகள் நீங்குவதுடன், மன அழுத்தமும் குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது இதயம் சீராக இயங்குவதால், இரத்த ஓட்டமும் சீராகும்.
அதன் மூலம் முதுகு, மூட்டுகள், தண்டுவடம் ஆகியன உறுதியாகின்றது. நீச்சல் பயிற்சி காரணமாக குடல் இயக்கம் சீரடைவதால், செரிமான சக்தி தூண்டப்பட்டு, அஜீரண கோளாறு அகலும்.
பசியைத் தூண்டச் செய்வதுடன், மலச்சிக்கல் பிரச்சினையும் நீங்குவதோடு மாதவிடாய் கோளாறுகளுக்கும் இது சிறந்த தீர்வாக அமையும்.