ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்
குழந்தைகளும் பாகற்காய் குழம்பை விரும்பி சாப்பிடணுமா.. அப்போ இப்படி செய்து கொடுங்க…
பொதுவாகவே பாகற்காய் என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான்.
இது கசப்பாக இருந்தாலும் பல்வேறு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடியது, உடலில் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க உதவும்.
குழந்தைகளுக்கும் பாகற்காய் கொடுப்பது மிகவும் நல்லது, குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வை கொடுக்கும். இதன் கசப்பு தன்மை காரணமாக குழந்தைகள் மட்டுமன்றி பெரியவரகளும் கூட இதை விரும்புவதில்லை.






