குழந்தைகளுக்கு பிடித்த சேமியா கேசரி
குழந்தைகள் இனிப்புக்கள் என்றால் விரும்பி உண்பார்கள், அவர்களுக்கு வித விதமான இனிப்பு பண்டங்களை நீங்கள் கடைகளில் வாங்கி கொடுத்திருப்பீர்கள்.
அனைவரும் விரும்பி சாப்பிடும் சேமியா கேசரி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த சேமியா கேசரியை நீங்கள் மாலை வேளையில் தேனீருடன் சேர்த்து உண்ணலாம்.
தேவையான பொருட்கள்
சேமியா – 500 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
நெய் – தேவையான அளவு
முந்திரி, பாதாம் – தேவையான அளவு
ஏலக்காய் – ஒரு ஸ்பூன்
குங்குமப்பூ – சிறிதளவு
செய்யும் முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் முந்திரி, பாதாமை சேர்த்து வறுத்து கொள்ள வேண்டும்
பின்னர் அதனுடன் சேமியாவை சேர்த்து பொன் நிறம் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் சேமியாவுடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். சேமியா வெந்தததும் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
பின்பு அதனுடன் பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து கலந்தால் சேமியா கேசரி தயார்.