தேங்காய் சட்னியில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க! அட்டகாசமான சுவை தரும்
தேங்காய் சட்னியை வைத்து மட்டும் சாப்பிடுபவர்களுக்கு அதனுடன் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து அரைத்த சுவையான சட்னி எவ்வாறு என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இட்லி தோசை என்றால வெறும் 10 நிமிடத்தில் தயாராவது சட்னி தான். தேங்காய், தக்காளி, வெங்காயம் இவைகளில் சட்னி செய்து சாப்பிட்டிருப்பார்கள்.
அதுவே தேங்காயுடன், மல்லி, இஞ்சி சேர்த்து சட்னி செய்தால் அட்டகாசமான சுவையுடன் இருக்குமாம். எவ்வாறு செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தேங்காய்- அரை கப்
பொட்டுக் கடலை- கால் கப்
பூண்டு- 1
இஞ்சி- சிறிதளவு
பச்சை மிளகாய்- 2
புளி- சிறிதளவு
கொத்தமல்லி- 1 கைப்பிடி
புதினா இலை- சிறிதளவு
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
தாளிக்க எண்ணெய்- சிறிதளவு
கடுகு, உளுந்தம் பருப்பு- சிறிதளவு
செய்முறை
தேங்காயை சிறிது சிறிதாக நறுக்கிக்கொண்டு, அதனை் மிக்ஸி ஜாரில் போடவும். அதனுடன் பொட்டுக்கடலை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், புளி, கொத்தமல்லி 1, புதினா, உப்பு அனைத்து சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்தால், சுவையான மணமணக்கும் தேங்காய் மல்லி சட்னி தயார்.