தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்கக் கூடாத உணவுகள்

குழந்தை வளர்ப்பு

குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எனவே குழந்தைகளுக்கு எது ஆரோக்கியமான உணவாக இருக்குமோ அந்த உணவை மட்டும் குழந்தைக்கு கொடுங்கள். இந்த பகுதியில் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன, இந்த உணவுகளை எல்லாம் குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை கொடுக்காதீர்கள்.

பால்

மாட்டின் பால் அல்லது சோயா பால் போன்றவை குழந்தைகளுக்கு செரிமானமாவது மிகவும் சிரமமான ஒன்றாகும். மேலும் இந்த பால்களில் உள்ள புரோட்டின் மற்றும் மினரல்கள் குழந்தையின் சிறுநீரகத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமின்றி சில குழந்தைகளுக்கு லேக்டோஸ் அலர்ஜி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை உண்டாக்கும். எனவே நீங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம். அல்லது தாய்ப்பாலை பாட்டிலில் கொடுக்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்

ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இவை குழந்தைக்கு எளிதில் செரிமானமாகாது. திராட்சை மற்றும் ஆரஞ்ச் போன்ற பழங்களில் அதிகமாக அமில தன்மை உள்ளது. இது குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது வயிற்று உபாதைகளை கொடுக்கும்.

தேன்

தேன் என்பது பாக்டீரியாக்களின் ஆதாரமாக உள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. இது குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டாக்குகிறது. அதே போல மற்ற திரவ இனிப்புகளும் கூட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. திரவ இனிப்புகள், மாப்பிள் சிரப் போன்றவையும் ஒரே மாதிரியான பிரச்சனையை தான் குழந்தைக்கு தருகின்றன.

பினட் பட்டர்

இது நிலக்கடலையில் இருந்து பெறப்படுவதாகும். இந்த பினட் பட்டரும் கூட குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்க கூடியதாக இருக்கிறது. எனவே இதை எல்லாம் நீங்கள் குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்கு பிறகு கொடுப்பது நல்லதாகும்.

சில காய்கறிகள்

கீரைகள், பீட்ரூட் போன்றவற்றில் லேக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. இது ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான உணவாகும். இதில் இருக்கும் சத்துக்களை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் உடலில் ஆசிட் சுரப்பது இல்லை. எனவே நீங்கள் இது போன்ற காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

உப்பு

குழந்தைகளுக்கு ஒரே ஒரு கிராம் உப்பு என்பது ஒரு நாளைக்கு போதுமானதாக உள்ளது. உங்களது தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான உப்பு இருக்கிறது. எனவே உப்பு கலந்த எந்த ஒரு பொருளையும் குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளுக்கு ஆபத்தை கொடுத்து விட்டாதீர்கள்.

நட்ஸ்

பாதாம், முந்திரி என ஒட்டுமொத்த நட்ஸ் வகைகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இவை அலர்ஜியை உண்டாக்க கூடியதாகும். இவை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை கூட குழந்தைகளுக்கு கொடுக்கும். எனவே எக்காரணத்தை கொண்டும் இது போன்ற நட்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

சாக்லேட்

அனைத்து குழந்தைகளுக்குமே சாக்லேட் என்றால் மிக மிக பிடிக்கும். ஆனால் சாக்லேட்டில் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

இதில் மட்டுமல்ல பால் பொருட்களும் குழந்தைகளுக்கு சேராது. எனவே இவற்றை கொடுப்பதை குழந்தை வளரும் வரை நிறுத்தி வைக்கலாம்

பாப் கார்ன்

பாப் கார்ன் ஒரு சுவையான உணவு தான். மொருமொருப்பாகவும் ஒரு ஆரோக்கியமான நொறுக்கு தீனியாகவும் உள்ளது. இது அனைவருக்குமே பிடிக்கும் ஒன்றாகும். ஆனால் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். 12 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு தயவு செய்து பாப்கார்ன் கொடுக்க வேண்டாம்.

முட்டை

முட்டை காலையில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது. ஆனால் முட்டையின் வெள்ளைக்கருவானது குழந்தைக்கு அலர்ஜுயை கொடுக்க கூடியதாக உள்ளது. உங்களது குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும் என்றால் முழுமையாக முட்டையின் வெள்ளைக் கருவை நீங்கிவிட்டு, மஞ்சள் கருவை மட்டும் சமைத்து கொடுக்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker