முக அழகை இரட்டிப்பாக்கும் தேங்காய் பால்.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக குளிர்காலங்களில் பலரை தாக்கும் ஒரே பிரச்சினை சருமம் வரட்சியாதல்.
இது கை, கால் மற்றும் உதடு பகுதிகளில் அதிகமான தாக்கத்தை காட்டும். இது போன்ற நேரங்களில் மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெயை பயன்படுத்துவார்கள்.
மேலும் சிலர் வரட்சியை போக்குவதற்கான இரசாயனம் கலந்த கீரிம்களை பயன்படுத்துவார்கள். இதனால் அலற்சி, பருக்கள், கருமை ஆகிய பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
முகத்தில் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு பேக்களை செய்து பயன்படுத்தலாம்.
அந்த வகையில் சருமத்தில் இருக்கும் வரட்சியை போக்கி இயற்கை அழகு கொடுக்கும் ஃபேஸ் பேக்குகளை எப்படி தயாரிப்பது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ஃபேஸ் பேக் வகைகள்
1. தேங்காய் பால்
நன்றாக பால் வரக் கூடிய தேங்காயை வாங்கி அதனை துருவி மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.அரைத்த பாலை வடிக்கட்டி அந்த பாலை வரட்சியாக இருக்கும் இடங்களுக்கு தடவவும்.சரியாக 20 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரை கொண்டு கழுவி வந்தால் வரட்சி நீங்குவதுடன் சருமம் பளபளப்பாகவும் மாறும்.
2. தேன் + ரோஸ் வாட்டர்
தேன் மற்றும் ரோஸ் வாட்டரை 2 தேக்கரண்டி விட்டு அதனை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்.சரியாக 10 நிமிடங்களுக்கு பின்னர் அதனை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் வரட்சி பிரச்சினை கிட்டக் கூட வராது. அத்துடன் சருமம் மென்மையாக மாறும்.
3. கற்றாழை + சந்தனப்பொடி
1 டேபிள் ஸ்பூன் சந்தன பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து இந்த பேக்கை முகத்தை கழுவிய பின்னர் அப்ளை செய்யவும்.பேக் போட்டு 15 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும்.இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் கண்டிப்பாக நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.சந்தனப்பொடி முகத்தை வெள்ளையாகவும் மாற்றும்.