ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்புதியவைமருத்துவம்
சின்ன வெங்காயம் மட்டும் போதும்.. நாவூறும் சுவையில் துவையில் செய்திடுங்கள்
வெங்காயம் வெறுமனே சமையலுக்கு சேர்க்கப்படும் சேர்மானங்களில் ஒன்று மாத்திரமல்ல.
இதில் பல வகையான சத்துக்களும் நன்மைகளும் அடங்கியுள்ளன. இனி வெங்காயத்தில் எவ்வாறு துவையல் செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள
சின்ன வெங்காயம் – 200 கிராம்
உளுத்தம் பருப்பு – 4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு போட்டு தனித்தனியாக போட்டு வறுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அதில் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அருமையான வெங்காய துவையல் தயார்.