முடி உதிர்வை இயற்கையாகவே கட்டுப்படுத்தனுமா… அப்போ இதையெல்லாம் செய்யாதீர்கள்
பொதுவாகவே பெண்களுக்கு அழகே அவர்களின் கூந்தல் தான் நீண்ட கூந்தலை கொண்ட பெண்களையே ஆண்களும் அதிகம் விரும்புகின்றனர்.
என்னதான் கஷ்டப்பட்டாலும் சூழல் மாசு மற்றும் தற்போதைய உணவுமுறை ஆகியன கூந்தல் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றன.
தற்காலத்தில் பெண்களுக்கு முடி உதிர்வு என்பது உளவியல் ரீதியாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
கூந்தல் வலிமையிழந்து, மெலிந்து பலவீனமடைவதுதான் முடி உதிர்வுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும்.இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்வது அவசியம்.
முடி உதிர்வை அதிகப்படுத்தும் காரணிகள்
முடிக்கு வண்ணம் தீட்டுதல், முடியை நேராக்குதல், முடியை உலர வைப்பதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்துதல், நெருக்கமான பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்துதல் போன்றன முடி உதிர்வை அதிகப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன.
இத்தகைய பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், மிகவும் குறைவான கலோரிகளை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளுதல், போன்ற காரணங்களாலும் முடி உதிர்வது அதிகமாகின்றது.
முடி உதிர்வை கட்டுப்படுத்தி நீண்ட ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டுமாயின் நமது அன்றாட உணவில் அதிகளவில் புரதம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தினசரி குறைந்த பட்சம் ஒரு முட்டையாவது சாப்பிடுவது முடி உதிர்வை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவுகின்றது.



