தேவையற்ற கொழுப்பினால் அவதிப்படுகின்றீர்களா… நெல்லிக்காய் செய்யும் அற்புதம்.
மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவு பொருள் தான் நெல்லிக்காய்.
ஏழைகளின் ஆப்பிள் என்றும் ஆயுளை வளர்க்கும் கனி என்று குறிப்பிடப்படும் நெல்லிக்காவில் அதிகமான அளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது.
கொஞ்சம் அதிக புளிப்பு, கொஞ்சமான இனிப்பு, எஞ்சிய துவர்ப்பு, சற்றே கசப்பு என்றிருக்கும் நெல்லிக்கனி இன்று பரவலாக எல்லோரது வீட்டிலும் பழங்கள் காய்களுடன் பயன்படுத்தப்படும் ராஜ கனியாக அழைக்கப்படுகின்றது.
சமைத்தாலும், வேக வைத்தாலும், காயவைத்தாலும், வெட்டி நறுக்கினாலும் மொத்த பயனையும் வீணாக்காமல் தரும் சத்து மிகுந்த கனி இந்த நெல்லிக்கனி.
நெல்லியில் 80% நீர்ச்சத்து நிறைந் திருக்கிறது. இதனுடன் புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் இரும்புச்சத்து, பாஸ்பரம், கரோடின் பாலிபினால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்திருக்கிறது.
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது, நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது.
நெல்லிக்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் நம் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. உடல் எடையை சீக்கிரமாக குறைக்க விரும்புவார்கள் நெல்லிக்காய் ஜூஸ் செய்து சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.