அசைவ உணவுடன் இந்த உணவுகளை சாப்பிட கூடாதது ஏன்… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு அசைவ உணவுகள் மிகவும் பிடிக்கும். அசைவ உணவுகளை கண்டவுடனேயே சிலர் மெய் மறந்து போய் விடுவார்கள்.
ஆனால் அசைவ உணவுகளை உண்ணும் போது குறிப்பிட்ட சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவ்வாறு அசைவ உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்
இறைச்சி வகைகளுடன் கீரை, மைதா போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது. இவை உடலுக்கு அதிக தீமைகளை ஏற்படுத்துகின்றன.
மைதாவுக்கு செரிமான சக்தி குறைவாக இருக்கும். இவை மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.
கிழங்கு வகை உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும். அதனால் இந்த வகை உணவுகளை அசைவ உணவுகளுடன் சேர்த்து சாப்பிடவோ சமைகவோ கூடாது.
முள்ளங்கியுடன் கறி சேர்த்து சமைகவோ, சாப்பிடவோ கூடாது. இந்த கலவை உணவை நச்சு தன்மையாக மாற்ற கூடும். பொதுவாக மீனுடன் தயிர் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள். ஆனால், கறி சாப்பிடும் போது முடிந்தவரை தயிர் சேர்க்காமல் இருப்பது நல்லது.
தேனுடன் கறி சேர்த்து சாப்பிட்டால் , தேன் அந்த உணவை நச்சுத்தன்மையாக மாற்ற கூடும் அசைவம் சாப்பிடும் போதும் சமைக்கும் போதும் குறித்த விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.