முற்றிலும் தலைமுடி பிரச்சினையை கட்டுபடுத்தும் தேங்காய் பூ பேஸ்ட்.. வீட்டில் செய்வது எப்படி…
பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் இருக்கும் பிரச்சினைகளில் பெரும் பிரச்சினையாக தலைமுடி உதிர்வு இருக்கின்றது.
இதற்கு என்ன தான் தீர்வு, என்ன தான் செய்வது? என பலரும் புலம்புகிறார்கள்.
அதிலும் சிலர் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என சோர்ந்து விடுவார்கள்.
இப்படி முடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருக்கும் போது கடைகளில் இருக்கும் செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் முடி உதிர்வு அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறையாது.
அந்த வகையில் தலைமுடி உதிர்வை முற்றாக கட்டுபடுத்த வேண்டும் என்றால் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு வீட்டு வைத்தியம் செய்து பார்க்கலாம்.
அப்படி என்ன செய்தால் தலைமுடி பிரச்சினை முற்றாக குறையும்? இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
தலைமுடி உதிர்விற்கான காரணம்
1. ஊட்டசத்து குறைபாடு
2. மன அழுத்தம்
3.மரபணு பரிமாற்றம்
4.ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு
5. தூக்கமின்மை
6. அதிகமான யோசனை
7. அலட்சியம்
8. இரசாயன பொருட்கள் பாவனை
தேங்காய் பூ பேஸ்ட்
தேவையான பொருட்கள்:
தேங்காய்- 1 மூடி
வெந்தயம்- 3 ஸ்பூன்
முட்டை- 1
காட்டன் துணி- சிறிதளவு
செய்முறை:
1. வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.
2. ஒரு மூடி தேங்காய் துருவி போட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
3. அரைத்த பூவிலிருந்து பாலை மாத்திரம் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.
4. பாலையும் வெந்தயத்தையும் மீண்டும் மிக்ஸியில் பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளவும்.
5. அரைத்த பின்னர் காட்டன் துணியை பயன்படுத்தி பேஸ்ட்டை வடிக்கட்டவும்.
6. பேஸ்ட்டுடன் 1 முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து விடவும்.
7. இதனை நன்றாக கலந்து விட்டால் பேஸ்ட் தயார்! இதனை குளிப்பதற்கு முன்னர் தலைக்கு தடவி மசாஜ் செய்யவும்.
8. 20 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுபடுத்தப்படும்.