எடை குறைப்பு முதல் சரும் ஆரேக்கியம் வரை..! தக்காளியை எப்படி பயன்படுத்தலாம்
பொதுவாக தற்போது இருப்பவர்களின் பெறும் பிரச்சினையாக எடை அதிகரிப்பு பார்க்கப்படுகின்றது.
துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் போன்ற காரணங்களில் எடை அதிகரிப்பு ஏற்படுகின்றது.
வயது, உயரம், ஆரோக்கியம் இவை மூன்றையும் சரியாக கணித்தால் நாம் முழு மனிதனாக வாழலாம்.
ஆரோக்கியமான உணவுமுறை என்று வரும்போது அதில் வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கும்.
இதன்படி, கொழுப்பைக் குறைக்க உதவும் பல உணவுகளில் தக்காளி ஒரு முக்கியப்பொருளாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் எப்படி தக்காளி எடை குறைப்பில் பங்களிப்பு செலுத்துக்கின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. தக்காளியில் கலோரிகள் குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் இருக்கின்றது. இதனால் அதிகப்படியான பசியை கட்டுபடுத்துக்கின்றது. எவ்வளவு தக்காளி சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.
2. தக்காளியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. ஆகையால் செரிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினை வராமல் தடுக்கின்றது.
3. கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகளை உறிஞ்சுவதை மெதுவாக்கின்றது. ஏனெனின் தக்காளியில் உள்ள நீர்ச்சத்து ஜெல் போன்று பயன்படுகின்றது.
4. குளோரோஜெனிக் அமிலம் ஹார்மோன் அளவை மாற்றியமைப்பதில் தக்காளி முக்கிய பங்காற்றுகின்றது. பசி மற்றும் மனநிறைவை ஊக்குவிக்கிறது, இதனால் அதிகம் சாப்பிட வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.
5. தக்காளியில் கேப்சைசின் என்ற பதார்த்தம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை வேகமாக கரைக்கின்றது.