முடி உதிர்வை உடனடியா நிறுத்தனுமா… அப்போ இந்த உணவுகள் தான் பெஸ்ட் சாய்ஸ்.
முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பது முக்கியம்.ஏனெனில் முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வது மிகப்பெரும் பிரச்சினையாகவுள்ளது. தற்போது சூழல் மாசு, ரசாயன கூந்தல் பராமரிப்பு பொருட்களின் அதிகரித்த பாவணை மற்றும் தவறான உணவுப்பழக்கம் ஆகியவற்றின் மூலம் முடி அதிகளவில் பாதிக்கப்படுகின்றது.
இந்த முடி உதிர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறுவதற்கு எந்தவித மருந்துப் பாவனையோ ரசாயனமோ இல்லாமல் உணவின் மூலமே எவ்வாறு சரிசெய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பீன்ஸ்
முடி உதிர்வை உடனடியா நிறுத்தனுமா? அப்போ இந்த உணவுகள் தான் பெஸ்ட் சாய்ஸ்
வேகவைத்த பீன்ஸ் உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது, இவை முடி உதிர்வதை தடுக்கவும் மீண்டும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் உதவும். இதே போன்று கீரையிலும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துகள் உள்ளது.
இந்த பட்டியலில் சோயாபீன்ஸ்களுக்கு அடங்கும். அசைவ உணவை உண்ணாதவர்களுக்கு இது போன்ற சைவ உணவுகள் அதிக இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்களை தருகிறது.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் எளிதில் கிடைக்கும் பழம் ஆகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பி உள்ளது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் முடி உதிர்தலுடன் தொடர்புடையது.
மேலும் தலைமுடியை உதிராமல் பார்த்துக்கொள்கிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. வால்நட்ஸ், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
மட்டி
இரும்புசத்து குறைபாடு உலகம் முழுவதும் உள்ள பொதுவான பிரச்சனை ஆகும். இதன் காரணமாகவும் முடி கொட்டும் பிரச்சனை உருவாகிறது. இந்த ஊட்டச்சத்து குறைபாட்டை சத்தான உணவுகள் மூலமே சரி செய்யலாம்.
மட்டி, இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருட்களில் ஒன்றாகும். இதனை தினசரி சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வை சரி செய்யலாம். மேலும், கடல் உணவான சிப்பிகள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
சிப்பிகளில் துத்தநாகம் நிரம்பியிருப்பதால் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது.
பூசணி விதைகள்
பூசணி விதைகள் சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உணவில் அதிக இரும்பு சத்து மற்றும் துத்தநாகத்தை பெற பூசணி விதைகளை சாப்பிடலாம்.
பூசணி விதைகளில் சுமார் 4.2 mg இரும்பு மற்றும் 2.9 mg துத்தநாகம் உள்ளது. இவை முடி வேர்களை ஊக்கப்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது.
கோழி கல்லீரல்
எந்த வகையான இறைச்சியும் இரும்பு மற்றும் துத்தநாகம் நிரம்பியுள்ளது. கடல் உணவான மீன் மற்றும் மட்டனில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.
ஆனால் கோழியிலும் ஊட்டச்சத்துகள் அதிகளவில் இருப்பதை மறக்க வேண்டாம். கோழி கல்லீரல் லைசின் மற்றும் ஜிங்க் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. மாட்டிறைச்சியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. இவையும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது.
சிவப்பு ஒயின்
ஆல்கஹால் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது இல்லை என்று கூறப்பட்டாலும், சிவப்பு ஒயினில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இவற்றில் மாதுளை சாற்றை விட அதிக அளவு ஊட்டசத்துக்குள் உள்ளது. இவை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.