காய்ச்சல் இருந்தால் குளிக்கலாமா … அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க.
தற்காலத்திவல் சூழல் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றின் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் நோய்வாய்ப்படுகின்றனர்.
இதனால் பலருக்கும் அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகின்றது. பலர் காய்ச்சல் வந்தால் குளிப்பதைத் தவிர்க்கிறார்கள். இந்த நேரத்தில் குளித்தால் பிரச்சனை அதிகமாகும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. இது எந்தளவு சரியானது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உண்மையில், காய்ச்சலின் போது உடல் வெப்பநிலை உயர்கிறது. உடல் வெப்பநிலையை குறைக்க குளிப்பது அவசியம். தேவைப்பட்டால் தலைக்கு குளிக்கவும் செய்யலாம்.
பொதுவாகவே காய்ச்சல் இருக்கும் நேரத்தில் ஈரத்துணியால் உடல் ழுழுவதையும் துடைப்பார்கள் இதன் நோக்கம் உடலின் வெப்பநிலையை குறைக்க வேண்டும் என்பது தான். இது சரி எனும் பட்சத்தில் குளிப்பதும் எந்தவகையிலும் பாதகத்தை ஏற்படுத்தாது.
ஆனால் காய்சல் நேரத்தில் குளிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீர் அதிக குளிர்மையாக இருக்கக் கூடாது. காரணம் அதிக குளிர் காரணமாக ரத்த குழாய்கள் சுருங்கும் இதனால் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாத நிலை ஏற்படும்.
காய்சல் நேரத்தில் குளிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது இருப்பினும் வெதுவெதுப்பான அல்லது சாதாரண தண்ணீரை பயன்படுத்துவது சிறந்தது.
காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற மருந்து சாப்பிட வேண்டியதும் அவசியமாகின்றது. குளிப்பதனால் நோய் கிருமிகள் உடலில் இருந்து வெளியேறுகின்றது. இதனால் காய்ச்சலின் போது குளிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் துணைப்புரியும்.
காய்ச்சலுடன் சளி-தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். முறையான உணவு முறையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க இந்த நேரத்தில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மீன், முட்டை, இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவ்வாறான உணவுகளை அதிகளவில் சேர்த்துக்கொள்வது காய்ச்சலை விரைவில் குணப்படுத்தும்.