ஆரோக்கியம்உறவுகள்புதியவைமருத்துவம்

புற்றுநோய்க்கு தீர்வு கொடுக்கும் தேன் : இவ்வளவு மருத்துவகுணங்கள் இருக்கா..

பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான்.

பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் எந்தளவு பங்குவகிக்கின்றது என்றும் தேனின் செறிந்துள்ள மருத்துவ பண்புகள் தொடர்பிலும் இந்த பதிலில் பார்க்கலாம்.

தேன் உடலில் விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. அதுமட்டுமன்றி உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தேன் சிறந்த தீர்வாக அமையும்.

குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும். இருப்பினும் ஒரு வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு தேன் கொடுக்க கூடாது.

கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.

தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் மூட்டு வலி காணாமல் போய்விடும்.

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேன் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் எனவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்.தேன் கூட்டை கட்டுவதற்கு தேனிகள் ஒரு விதமான பிசினை பயன்படுத்துவதாகவும் இந்த பிசின் தேனியின் கொடுக்கில் உள்ள விஷம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஆபத்து இல்லாதது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிக்கு தேன் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் புற்றுநோயின் தாக்கம் எலிக்கு குறைந்தது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து புற்றுநோயை தேன் குணப்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அலப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த தேன் புற்று நோய்க்கும் தீர்வு கொடுக்கின்றது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker