பியூட்டி பார்லர் செல்லாமல் வீட்டிலிருந்தபடி முகத்தை பளபளப்பாக்க வேண்டுமா… ஒரே ஒரு ஜூஸ் போதும்.
பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகத்தை எப்போது அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள்.
அழகுசாதன பொருட்கள் அல்லது வீட்டிலேயே ஏதாவது செய்து முகத்தை எப்போதும் அழகாக வைத்திருக்க விரும்புவார்கள். அதற்காக ஒரு சிலர் உடனே செல்வது பியூட்டி பார்லர் தான்.
ஆனால் பார்லர் போகாமலேயே வீட்டிலேயே சில எளிய முறைகளில் உங்களை அழகாக்கும். அதில் உங்களுக்கு உதவும் சிறந்த தீர்வு தான் பீட்ரூட் ஜூஸ்.
பீட்ரூட் ஜூஸ் செய்முறை
முதலில் பீட்ரூட்டை தோல்சீவி கழுவி கொள்ளவும் பின் பொடியாக நறுக்கி அத்துடன் இஞ்சி எலுமிச்சைச் சாறு வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இப்போது அரைத்ததை வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இப்போது நமக்கு பீட்ரூட் ஜூஸ் தயார்.
பீட்ரூட்டில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியமான, அதிக பொலிவான சருமத்திற்கு உதவுகிறது.
பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் வயதானதை தாமதப்படுத்தி இளமையான சருமத்தை கொடுக்கும்.
பீட்ரூட் ஜூஸில் இரும்பு மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளதால், அவை வறண்ட சருமத்திற்கு சிறந்த தீர்வைக் கொடுக்கும்.
பீட்ரூட்கள் உங்கள் சருமத்தை சிறிது சிறிதாக பிரகாசமாக்கும் பீட்ரூட் ஜூஸ் இரத்தத்தை சுத்திகரித்து பளபளப்பான நிறத்தையும் கொடுக்கும்.
பீட்ரூட்டின் நன்மைகள் கருவளையங்களை விரைவில் மறைத்து விடும்.