லஸ்ஸி குடிக்கும் பழக்கம் இருக்கா… அப்போ இந்த நோய் உங்களுக்கு வரவே வராது.. தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக நாடுகளில் பல நாட்கள் வெப்பமும், சில நாட்கள் அதிகப்படியான குளிர்ச்சியும் காணப்படும்.
இது போன்ற காலங்களில் நாம் லஸ்ஸி போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற பானங்களை எடுத்து கொள்வது அவசியமாகும்.
கட்டியாக இருக்கும் தயிரை வைத்து செய்யப்படும் இந்த சுவையான பானம் லஸ்ஸி விரும்பி குடிக்கப்படும் பானமாக இருந்து வருகின்றது.
இது குறிப்பிட்ட சில வியாபார நிலையங்கள் தவிர்த்த ரோட்டுக்கடைகள் மற்றும் உணவகங்களில் கிடைக்கும்.
உடலின் சூட்டை தணித்து சரியான வெப்ப நிலையில் வைத்து கொள்ள லஸ்ஸி உதவியாக இருக்கின்றது.
தினமும் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் தான். மாறாக லஸ்ஸியை மதியப் பொழுதில் குடிப்பது சிறந்தது. இதனால் உடலுக்கு தேவையான பொட்டாசியம், புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.
உடல் சூட்டினால் அவதிப்படும் பெண்கள் தங்களின் சூட்டை தணித்து கொள்வதற்கு இதனை ஒரு மருந்தாக எடுத்து கொள்ளலாம்.
1. லஸ்ஸியை தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க முடியும்.
2. லஸ்ஸி வயிற்றை சுத்தமாக வைத்திருக்கிறது, இதனால் ஒரு நாள் முழுவதும் செரிமான செயல்முறையை ஆரோக்கியமாக பேணப்படுகின்றது.
3. மன அழுத்தமும் நீங்கும்.
4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏனெனின் லஸ்ஸியில் லஸ்ஸியில் உள்ள புரோபயாடிக் சத்துக்கள் அதிகமாகவுள்ளது.
5. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள் லஸ்ஸியை தாராளமாக குடிக்கலாம்.