கண் எரிச்சல், சோர்வு, சூடு நீங்கி குளுகுளுவென இருக்க வேண்டுமா… அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தான்..
பொதுவாக பெண்கள் பேசும் போது அவரின் வார்த்தை விட அவர்களின் கண்கள் அதிகமாக கதைகள் கூறுகின்றன.
தற்போது இருக்கும் நவீன உலகில் பெண்கள் தங்களின் ஒவ்வொன்றையும் மிக கவனமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்.
சரியான தூக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை பெண்களின் கண்களுக்கு ஒரு விதமான பிரகாசத்தை கொடுக்கின்றது.
அந்த வகையில் கண்களை பிரகாசப்படுத்த என்ன மாதிரியான டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து பார்க்கலாம்.
முறையான பராமரிப்பு ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லையென்றால் அதனை கண்களில் பார்க்கலாம்.
கண்கள் பார்ப்பதற்கு வரட்சியாகவும், சிவப்பு நிறத்திலும் காணப்படும் என்றால் உடல் சூடு அதிகமாகவுள்ளது என அர்த்தம்.
ஆகையால் குளுமை நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
1. வெள்ளரிக்காய் சாறு ஒரு ஸ்பூன் என்றால், உருளைக்கிழங்கு சாறும் ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும்.
2. அதனுடன் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும்.
3. பின்னர் ஒரு நல்ல பஞ்சில் இந்த சாற்றில் ஊறவிட்டு அந்த நனைந்த பஞ்சினை எடுத்து இரவு படுக்க செல்வதற்கு முன்னர் கண்களில் 20 நிமிடம் ஒற்றிக்கொள்ள வேண்டும்.
4. இவ்வாறு தொடர்ந்து செய்தால் கண்களில் இருக்கும் சூடு தணிந்து குளிர்ச்சியான ஒரு தோற்றம் கிடைக்கும்.