கோடைக்கால வெயிலுக்கு சன்ஸ்க்ரீன் மட்டும் போதாது... இந்த உணவுகளையும் சாப்பிடுங்க..!
பொதுவாக கோடைக்காலங்களில் வெளியில் ஒரு 10 நிமிடங்கள் கூட நிற்க முடியாது.
மீறினால் சருமம் கருமையடையும், வரண்டு காணப்படும், வெடிப்பு ஏற்படும் இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இது போன்ற பாதிப்புகளை தடுக்க வேண்டும் என்றால் வெளியில் செல்லும் முன்னர் சன்ஸ்க்ரீன் போட்டு கொள்வது சிறந்ததாக இருக்கும்.
இவ்வாறு கெமிக்கல் பயன்படுத்த தயங்குபவர்கள் இயற்கையான முறையில் சருமம் பாதுகாப்பது என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் கோடைக்கால வெயிலிலிருந்து தப்பித்து கொள்ள ஈஸியான டிப்ஸ்களை தெரிந்து கொள்வோம்.
கோடைக்காலங்களில் கைக் கொடுக்கும் உணவுகள்
1. எலுமிச்சை சாறு
நிம்பு பானி, ஷிகாஞ்சி மற்றும் பிற எலுமிச்சைப் பானங்களை குடிப்பதால் உடலுக்குள் இருக்கும் சூடு வெளியாகி, சருமத்தை குளிர்ச்சியடைக்கின்றது. அத்துடன் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஊதாக் கதிர்களைத் தடுக்க உதவுகிறது.
2. லஸ்ஸி
தயிர், லஸ்ஸி ஆகிய பொருட்களை சாப்பிடுவதால் இரும்பு ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சல்கள் மேம்படுத்தப்படுகின்றது. தொடர்ந்து சருமம் தொடர்பான பிரச்சினைகள் இல்லாமலாக்கபட்டுகிறது.
3. கிரீன் டீ
உடல் எடையை குறைக்க அல்லது செரிமானத்தை அதிகரிப்பு கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் காரணமாக, வெயிலில் போகும் போது சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிற மாற்றத்தைத் தடுக்கிறது.