வறண்ட சருமத்தை வளமாக்கும் வைட்டமின்கள்.. எப்படி எடுக்கலாம்!
வறண்ட சருமத்தை முழுமையாக குணப்படுத்த முடியாது. சரியான வைட்டமின்கள் சேர்ப்பதன் மூலம் அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும். இளமையான தோற்றம், பளபளப்பான சருமம் கிடைக்கும். ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அளிக்கும் சரும பராமரிப்பை தோல் பராமரிப்பு பொருள்கள் அளித்துவிடாது. எனினும் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு எந்த ஊட்டச்சத்துக்கள் உதவும் என்பதை அறிவது அவசியம். அதை தான் இப்போது பார்க்க போகிறோம்.
வறண்ட சருமத்துக்கு வைட்டமின் டி
வைட்டமின் டி (சூரிய ஒளியிலிருந்து எளிதாக பெறக்கூடியது) சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது. இது தோல் செல் வளர்ச்சி மற்றும் தோல் தடை செயல்பாட்டில் உதவுகிறது.
கெரடினோசைட்டுகள் -தோலின் வெளிப்புற அடுக்கை உருவாக்கும் . தோல் செல்களானது வைட்டமின் டி உருவாக்ககூடியது.
வைட்டமின் டி தடிப்புத்தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் நிலைகளின் அறிகுறிகளுக்கு உதவுவதாக அறியப்படுகிறது.
வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து பெறலாம். வைட்டமின் டி அடங்கிய மஷ்ரூம், டுனா மீன், சால்மன் முட்டையின் மஞ்சள் கரு, பசும்பால், சோயா பால், ஆரஞ்சு சாறு, உணவு பொருள்களை சேர்க்கலாம். வைட்டமின் டி சப்ளிமெண்ட்களாக எடுப்பதாக இருந்தால் மருத்துவரின் அறிவுரையுடன் எடுப்பது பாதுகாப்பானது.
வறண்ட சருமத்துக்கு வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது. இது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட செய்கிறது. தோல் பராமரிப்பு பொருள்களில் இவை பிரபலமானவை. வைட்டமின் ஈ மேற்பூச்சு தோல் வறட்சி மற்றும் அரிப்புக்கு உதவும். இது தழும்புகளின் தோற்றத்தை குறைக்க செய்யலாம்.
2016 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில் 96 பேர் எட்டு மாதங்கள் வாய்வழி வைட்டமின் ஈ எடுத்துகொண்டனர், இவர்களுடன் மருந்துகள் எடுத்துகொண்டவர்களை காட்டிலும் வைட்டமின் ஈ எடுத்தவர்களுக்கு அதிக முன்னேற்றம் காணப்பட்டது, சிலருக்கு தோலழற்சி நிவாரணம் கிடைத்தது.
கொட்டைகள், கீரைகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் முழு தானியங்கள் மூலம் வைட்டமின் ஈ போதுமான அளவு பெறலாம். சப்ளிமெண்ட் கிடைக்கும் என்றாலும் மருத்துவரின் அனுமதியுடன் எடுப்பது பாதுகாப்பானது.
வறண்ட சருமத்துக்கு வைட்டமின் பி
வைட்டமின் பி ஆனது நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. இது சருமத்துக்கு சிறந்த நன்மை அளிக்கும். வைட்டமின் பி கெரடினோசைட்டுகளை மேம்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவை தோலின் வெளிப்புற அடுக்கான எபிடெர்மிஸ் செல்களை 90% உருவாகுகிறது. இதன் குறைபாடு வைட்டமின்கள் பி, சருமத்தில் இயற்கையான நீர் இழப்பை குறைக்கிறது.
சால்மன், பச்சை நிற காய்கறிகள், கீரைகள், உறுப்பு இறைச்சி , முட்டை, பால், ஒய்ஸ்டர்ஸ், பருப்புகள், கோழி இறைச்சி, தயிர் போன்றவற்றின் மூலம் பெறலாம்.
வறண்ட சருமத்துக்கு வைட்டமின் சி
வைட்டமின் சி ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும ஆரோக்கியத்துக்கு சிறந்தது. இது இயற்கையாகவே ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் மாசுபாட்டுக்கு எதிராக போராடுகிறது. இவை இயற்கையான புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்துக்கு பாதுகாப்பை அளிக்கிறது. வைட்டமின் சி சருமத்தில் உள்ள கொலாஜனை அதிகரித்து நீர் இழப்பிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இது வயதான அறிகுறிகளை குறைக்கும். வீக்கத்திலிருந்து பாதுகாக்கும்.
வைட்டமின் சி சிட்ரஸ் பழங்களில் அதிகமாக காணப்படுகிறது. குடை மிளகாய், கொய்யா, மஞ்சள் நிற குடை மிளகாய், கிவி பழம், ப்ரக்கோலி, காலே, எலுமிச்சை , லிச்சி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்றவற்றில் நிறைவாக உள்ளது.
வறண்ட சருமத்துக்கு ஜிங்க் உதவுமா
துத்தநாகம் நுண்ணூட்டச்சத்து. இது டிஎன்ஏ மற்றும் ஆர் என்ஏ ஒழுங்குமுறையின் சரியான செயல்பாட்டை பராமரிக்க செய்யும். நோயெதிர்ப்பு மண்டலத்தை சரி செய்யகூடிய துத்தநாகம் காயத்தை சரி செய்ய உதவுகிறது. வறண்ட சருமம் கொண்டிருப்பவர்கள் அரிக்கும் தோலழற்சி கொண்டிருப்பவர்கள், தடிப்புத்தோல் அழற்சி உள்ளவர்களுக்கு ஜிங்க் நன்மை அளிக்கும். இது கனிம அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. சூரியனிடமிருந்து வரும் புற ஊதா சேதத்தை தடுக்க இவை உதவுகிறது.
இதை மேற்பூச்சாக பயன்படுத்தும் போது கனிம வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நாள்பட்ட வீக்கத்தை குறைக்க செய்யும்.
வறண்ட சருமத்துக்கு புரோபயாடிக் உதவுமா.
புரோபயாடிக்குகள் உங்கள் நுண்ணுயிரியிலுள்ள பாக்டீரியாவை சமநிலைப்படுத்துகிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன.
2015 ஆம் ஆண்டின் ஆய்வில் லாக்டோபாசிலஸ் பிளாண்டரம் lactobacillus plantarum தினமும் எடுத்துகொண்டவர்கள் தோல் நீரேற்றம் பெற்றனர்.
எனினும் புரோபயாடிக் சப்ளிமெண்ட்க்கு மாற்றாக இயற்கையாகவே தயிர், புளிக்க வைக்கப்பட்ட இயற்கை உணவுகளை சேர்க்கலாம்.
வறண்ட சருமத்துக்கு கொலாஜன் உதவுமா.
கொலாஜன் குருத்தெலும்பு மற்றும் தோல் உருவாக்க கூடியது. இவை அழகு தயாரிப்பு பொருள்களில் முக்கியமானவை. 2020 ஆம் ஆண்டு ஆய்வில் 60 பெண்கள் கொலாஜன் பெப்டைட்களை வைட்டமின் சி, துத்தநாகம், வைட்டமின் ஈ, பயோட்டின் மற்றும் அசெரோலா சாற்றுடன் 12 வாரங்கள் எடுத்துகொண்டனர். முடிவில் இவர்கள் சருமம் நீரேற்றம், புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்ப்பதன் மூலம் தோலின் தரத்தை மேம்படுத்தியது கண்டறியப்பட்டது.