நீங்காத மஞ்சள் கறையையும் நீக்கி பற்களை வெள்ளையாக்கணுமா… இந்த வீட்டு வைத்தியத்த செய்ங்க…
பற்களில் மஞ்சள் கறை அதிகமாக உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சரியான பராமரிப்பு இல்லாதது, பாக்டீரியாக்கள் தொற்று இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றை கெமிக்கல் தயாரிப்புகள் கொண்டு ப்ளீச் செய்யும்போது பற்களை பாதுகாக்கும் எனாமலும் சேர்ந்து பாதிக்கும். அதனால் இயற்கையான முறையில் பற்களை வெள்ளையாக மாற்ற முயற்சிப்பது தான் சிறந்தது.
பற்களை வெள்ளையாக்கும் முறைகள்
பற்களில் உள்ள கறைகளை நீக்கி மூன்று வழிகளில் நாம் வெள்ளையாக மாற்ற முடியும்.
1. மருத்துவர் உதவியோடு – பல் மருத்துவர்களின் ஆலோசனையோடு கெமிக்கல் பேஸ்டு சிகிச்சைகள், ப்ளீச்சிங், ஹைட்ரஜன் பெராக்சைடு ஜெல்,கார்பமைடு பெராக்சைடு ஜெல் போன்ற ரசாயனங்களின் உதவியோடு பற்களை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாக வெள்ளையாக மாற்றி விட முடியும்.
2. மருத்துவ உதவியின்றி – மருத்துவர்கள் பயன்படுத்தும் அதிகப்படியான ரசாயனங்கள் இல்லாமல் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும் சில மௌத்வாஷ், ஜெல், ஸ்டிரிப்புகள், டூத் பேஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
3. வீட்டு வைத்தியங்களின் மூலம் சார்க்கோல், உப்பு மஞ்சள் உள்ளிட்ட சமையலறை பொருள்களை வைத்து பற்களின் மஞ்சள் கறையை போக்க முயற்சி செய்யலாம்.
பற்களில் மஞ்சள் கறை உண்டாகக் காரணங்கள்
பற்களில் மஞ்சள் கறை உண்டாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை,
வயதாகும்போது பற்களின் வெள்ளை நிறம் மாறி மஞ்சளாக மாறலாம்,
வாய் சுகாதாரத்தை சரியாக கடைபிடிக்காததால் மஞ்சள் கறை ஏற்படும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள், அடர்ந்த நிற உணவுகள், ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது
சில வகை மருந்துகள் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் போது பற்கள் மஞ்சள் நிறமாக மாறும்.
சில உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்தாலும் பற்களின் வெண்மை நிறம் குறைந்து மஞ்சளாக மாறும்.
பற்களின் மஞ்சள் கறையை போக்கி வெள்ளையாக மாற்றும் வீட்டு வைத்தியம்பேக்கிங் சோடா – லெமன் ஜூஸ்
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அதில் 2 ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி பல் துலக்கி வர, பற்களின் மஞ்சள கறைகள் நீங்கி வெண்டையாக மாற ஆரம்பிக்கும்.
ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங் வெறும் வாய் சுகாதாரத்துக்கு மட்டுமல்ல, இதயத்துக்கும் நல்லது பொதுவாக நல்லெண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வார்கள். ஆனால் பற்களின் கறைகள் நீங்கி வெண்மையாக மாற தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வது நல்லது.
ஹைட்ரஜன் பெராக்சைடு
ஹைட்ரஜன் பெராக்சைடு என்பது மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும். இந்த ஹைட்ரஜன் பெராக்சைடை அரை கப் தண்ணீரில் கலந்து மௌத் வாஷாகப் பயன்படுத்தி வர வேண்டும்.
தொடர்ந்து இதை மௌத்வாஷாகப் பயன்படுத்தும் போது பற்களின் மஞ்சள் கறைகள் நீங்கி வெண்மையாக மாற ஆரம்பிக்கும்.
ஸ்டிராபெர்ரி
இது கேட்கவே புதிதாக இருக்கலாம். ஆனால் ஸ்டிராபெர்ரிக்கு இயற்கையாகவே பற்களின் மஞ்சள் கறைகளை போக்கும் ஆற்றல் உண்டு.
ஸ்டிராபெர்ரியை காம்பு நீக்கி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டாக நறுக்கி பற்களின் மேல் வைத்து தேய்த்து வரலாம். நாளடைவில் பற்களின் மஞ்சள் கரு மறைய ஆரம்பிக்கும்.
இதே மசித்த ஸ்டிராபெர்ரியை டூத் பேஸ்ட் போல பயன்படுத்தி பல் துலக்கி வர பற்களின் மஞ்சள் கறை நீங்கி வெண்மையாக மாற ஆரம்பிக்கும்.
சார்க்கோல்
சார்க்கோல் பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கி வெண்யைாக பளிச்சென்று மாறும்.
நம்முடைய முன்னோர்கள் வீட்டிலுள்ள கரியைக் கொண்டு தான் பல் துலக்கி வந்தார்கள். இந்த சார்க்கோல் பொடியை வைத்து தினமும் பல் துலக்கி வர பற்கள் பளிச்சென்று வெண்மையாக மாறும்.