உதடு அடிக்கடி காய்ந்து விடுகிறதா… அப்போ இது தான் சரியான வழி.. செய்து பாருங்க!
பொதுவாக சிலருக்கு உதடுகள் அடிக்கடி காய்ந்து இருப்பது போன்று தோன்றும்.
இதனால் உதட்டில் சில காயங்கள், வெடிப்புகள் இருக்கும்.
உடலில் நீர்ச்சத்து சரியாக இல்லாவிட்டால் உதடு தான் முதலில் காய்ந்து இருப்பது போன்று இருக்கும்.
அந்த வகையில், உதட்டை காயாமல் எப்படி பராமரிப்பது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. கோடைக்காலங்களில் காலை பொழுதில் அதிகமான பனி காணப்படும். சரியாக மார்கழி மாதத்தினை கூறலாம். இதன் காரணமாக கோடைக்காலங்களில் அதிகாலையில் வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளவும்.
2. உதடு காய்ந்து காயங்கள் இருந்தால் வீட்டிலுள்ள எண்ணெய்கள் ஏதாவது இருந்தால் அதனை எடுத்து உதட்டில் பூசினால் காயங்கள் மற்றும் வெடிப்பு மாற ஆரம்பிக்கும்.
3. ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் தேங்காய் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து உதடுகளில் தடவி வந்தால் சில நாட்களில் உதட்டின் நிறம் மாறும்.
4. எலுமிச்சை பழச்சாறு இலவங்கப்பட்டை தூள் கலந்து உதடுகளில் பூசி வந்தால் அதுவும் காலப்போக்கில் மாற ஆரம்பிக்கும்.
5. வீட்டிலுள்ள காய்கறிகள் பீட்ரூட்டை எடுத்து அதனை அரைத்து அதன் சாற்றை மாத்திரம் வாயிற்கு பூசீனால் உதட்டின் நிறம் மாறும்.
6. தினமும் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து உடம்பில் இருந்தாலே உதடு காயாமல் பாதுகாக்கலாம்.