மணத்தக்காளி கீரையில் சூப் செய்து குடித்தால் என்ன நடக்கும்… தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக வீடுகளில் காய்கறிகள் அதிகமாக உணவுகள் சமைப்பார்கள்.
ஏனெனின் உடம்பிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கக்கூடிய தன்மை காய்கறிகளுக்கு தான் அதிகமாக இருக்கின்றது.
அதுவும் கீரைகள் அதிகமாக எடுத்து கொள்வதால் தலைமுடி துவக்கம் நகம் வரை அனைத்தும் வளர்ச்சியடையும்.
அந்த வகையில், மணத்தக்காளி கீரை வைத்து கூட்டு, குழம்பு, சூப் என ஏகப்பட்ட வகைகளில் சமைக்கலாம்.
இதில் ஒன்றான மணத்தக்காளி கீரை சூப் செய்து குடிப்பதால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என தெரிந்து கொள்வோம்.
1. மணத்தக்காளி கீரையில் விட்டமின் ஈ மற்றும் டி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இதனால் தலைமுடி பிரச்சினைகள் வராமல் பாதுகாத்து கொள்கின்றது.
2. வயிற்றில் ஏதாவது புண்கள் இருந்தால் இவ்வாறு மணத்தக்காளி கீரையில் சூப் செய்து குடிக்கலாம். உடனடி தீர்வு கிடைக்கும்.
3. மணத்தக்காளி கீரையில் உள்ள விட்டமின்கள் கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
4. மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது காசநோய் பிரச்சினைகள் குணமாகும் என முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள்.
5. மணத்தக்காளி இலைகளை மென்று சாப்பிட்டு வர வாய்ப்புண் பிரச்சினை குணமாகும். அத்துடன் வாய் துர்நாற்றம் இருந்தாலும் இதனால் குணமாகும்.