முடி வளர்ச்சியை அதிகரிக்கும் சீயக்காய் பொடி: இப்படி செய்து பயன்படுத்தினால் காடு போல முடி வளரும்.
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம் அதிலும் பல இயற்கை நலன்கள் நிறைந்த சீயக்காயை கொண்டு முடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
இந்த சீயக்காயைக் கொண்டு தூள் செய்து பயன்படுத்தினால் உங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
சீயக்காய் தூள் செய்ய தேவையான பொருட்கள்
சிகைக்காய் – 1/2 கிலோ
பூலாங்கிழங்கு – 100 கிராம்
பச்சைப்பயறு – 100 கிராம்
கரிசலாங்கண்ணி – 50 கிராம்
வெந்தயம் – 100 கிராம்
பூந்திக்கொட்டை – 100 கிராம்
ஆவாரம்பூ- 50 கிராம்
செம்பருத்தி – 50 கிராம்
உலர்ந்த ஆரஞ்சு பழத்தோல் – 10 கிராம்
உலர்ந்த எலுமிச்சை தோல் – 10 கிராம்
கறிவேப்பிலை – 50 கிராம்
மேற்குறிப்பிட்ட மூலிகைகள் அனைத்தையும் வெயிலில் நன்றாக காய வைத்து அரைத்து பயன்படுத்த வேண்டும்.
உங்களது முடியை பளபளப்பாக்கவும், வளர்ச்சிக்கும் அதிகம் உதவுவது சீயக்காய் இந்த சீயக்காயில் செய்யப்பட்ட தூளில் தயிர் கலந்து பேஸ்ட் போல செய்து தலையில் அரைமணி நேரத்திற்கு வைத்திருந்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முடியானது பிளவு இல்லாமல், முடி உதிர்வும் இல்லாமல் வளரும்.