தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி… ஒருமுறை சுவைத்தால் தினமும் செய்வீங்க…
பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்டி, தோசை தான் உணவாக இருக்கும்.
அந்த தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சட்னி செய்து சுவைத்தால் மிகவும் அருமையாக இருக்கும். அந்தவகையில் வெங்காயத்தைக் கொண்டு சட்னியை செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 3
காய்ந்த மிளகாய் – 4
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
வெங்காய சட்னி செய்யும் முறை
தாளிக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பிறகு வெங்காயம், புளி, பூண்டு என்பவற்றையும் வதக்கிக் கொள்ளவும். பின்னர் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஆற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து எடுத்துக் கொண்டதை எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை சேர்த்து தாளித்து எடுத்தால் சுவையான வெங்காய சட்னி தயார்.