ஆண்களுக்கு பாடி மசாஜ் செஞ்சா நரைமுடி வராதாம்… இன்னும் இந்த 8 விஷயம் நடக்குமாம்…
மாதத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் மசாஜ் செய்வது மிக முக்கியம். உடலுக்கு மசாஜ் செய்வதன் மூலம் தசைகளின் வலியைப் போக்குவது, உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும்.
அசதியை குறைக்கும்
உடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களுக்கு அதிக எனர்ஜி செலவாவதோடு தசைகள் சோர்வாக இருக்கும்.
தசைகளைத் தளர்வாக்கி நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கச் செய்து தசைகளை வலிமையாகவும் பிடிப்புகளைப் போக்கச் செய்யவும் மசாஜ் உதவி செய்கிறது.
மனநிலை மேம்பட
நரம்புகளைச் சீராக்கி மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்வதில் மசாஜ்க்கு முக்கிய இடமுண்டு.
அதிலும் மன அழுத்தத்தைக் குறைத்து, உடலில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் குறைத்து மனநிலையில் நல்ல ஆரோக்கிய மாற்றங்களை ஏற்படுத்த மசாஜ் உதவி செய்கிறது.
நரைமுடி வருவதை தள்ளிப்போடும்
உடலுக்கு மசாஜ் செய்தால் நரைமுடி வருவதை தள்ளிப் போட முடியுமா? இது கேட்க ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் உடல் முழுவதும் நன்கு மசாஜ் செய்வதன் மூலம் மன நிலை மேம்படும். மன அழுத்தமும் குறையும்.
இதனால் உச்சந்தலை வரையிலும் ரத்த ஓட்டம் சீராகி முடி நரைப்பதை தள்ளிப் போடுவதோடு முடியின் வளர்ச்சியை தூண்டவும் செய்கிறது.
பிடிப்புகள் நீங்கும்
அலுவலகத்தில் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது தசைகளை சோர்வாக்கும். ஒருவித பிடிப்புகள், நரம்பு பிடிப்புகள், தசை பிடிப்புகள் உண்டாகும். இவற்றை சரிசெய்து உடலை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்க மசாஜ் உதவி செய்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த
சருமத்திற்கு வெதுவெதுப்பாக ஆயில் சேர்த்து நன்கு மசாஜ் செய்வதன் மூலம் சரும வறட்சி நீங்கி, முகம் முதல் உள்ளங்கால் வரை அனைத்து பகுதிகளிலும் சருமம் நல்ல நீர்ச்சத்துடன் மாய்ஸ்ச்சராக இருக்கும்.
தூக்கத்தை மேம்படுத்தும்
ஒரு நல்ல ஆயில் மசாஜ் செய்துவிட்டு, வெதுவெதுப்ான நீரில் குளித்துவிட்டு கட்டிலில் படுத்தால் தூக்கம் அப்படி வரும். உங்களையே மறந்து தூங்குவீர்கள்.
ஏனெனில் எண்ணெயில் நன்கு மசாஜ் செய்யும்போது உடல் முழுவதும் உள்ள தசைகளின் இறுக்கத்தை குறைத்து ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் தூக்கமும் மேம்படும்.
முதுகு வலி குறையும்
உடல் முழுவதும் ஃபுல் பாடி மசாஜ் செய்து கொள்ளும்போது உடலில் உள்ள அக்குபஞ்சர் பாயிண்ட்கள் தூண்ப்படும். குறிப்பாக முதுகுத் தண்டுப் பகுதியில் மசாஜ் செய்யும்போது இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் உள்ள தசை வலி, தண்டுவடத்தில் ஏற்படும் வலி, கழுத்து வலி ஆகியவை குறையும்.
இதய ஆரோக்கியத்துக்கு
மேலே சொன்ன எல்லா நன்மைகளையும் தருவதோடு மிக முக்கியமாக இந்த பாடி மசாஜ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.
உலகில் உள்ள ஆண்களில் குறைந்தது 8 சதவீதம் பேர் கரோனரி நோய்கள் என்று சொல்லக்கூடிய கார்டியோவாஸ்குலர் நோய்களைால் பாதிக்கப்பட்டிருக்கிறாகள்.
உடல் முழுவதும் மசாஜ் செய்யும்போது மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து, உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.