ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவை

மெழுகு மாதிரி வழுவழுனு உதடு இருக்கணுமா… இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க…

உதடு ஸ்டிராபெர்ரி மாதிரி சிவப்பு ஜூஸியா இருக்கணும்னு யாருக்கு தான் ஆசை இருக்காது. அதற்கு முழு உடலையும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். நீர்ச்சத்து அதிகமாக இருந்தால் இயல்பாகவே உதட்டை பளபளவென கண்ணாடி போல வைத்துக் கொள்ள கீழ்வரும் சில விஷயங்களை செய்ங்க…

​உதட்டுக்கு ஸ்கிரப்பிங் ( lip exfoliation)

சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் போக்குவது போல உதட்டிலுள்ள இறந்த செல்களையும் போக்க வேண்டியது மிக முக்கியம்.

ஆனால் நாம் சருமத்தையாவது அரிதாக ஸ்கிரப்பிங் செய்கிறோம். ஆனால் உதட்டைக் கண்டுகொள்வதே கிடையாது.

உதடுகளில் உள்ள அனைத்து வறண்ட, செதில்களையும் உதடு வறட்சியையும் நீக்கினால் தான் உதடு மென்மையாக மாறும். அதனால் வாரத்தில் இரண்டு முறை அல்லது ஒருமுறையாவது உதட்டை ஸ்கிரப் செய்ய வேண்டியது மிக முக்கியம்.

உதட்டை பராமரிக்க
​​
​உதட்டை மென்மையாக்குதல்

உதடு வறட்சியுடனும் செதில்களாக உரியும் நிலையில் இருக்கிறது என்றால் அதில் இன்னொரு முக்கியமான விஷயம் நீர்ச்சத்து குறைபாடு தான்.

சருமத்தில் இருப்பது போல செபாசியஸ் சுரப்பில் நம்முடைய உதடுகளில் கிடையாது. அதனால் தான் உதடுகளில் வியர்வை உற்பத்தி ஆகாது. அதனால் இயற்கையாகவே தானாக ஹைட்ரேட் ஆகாது. அதனால் நாம்தான் உதட்டை ஹைட்ரேட்டிங்காக வைத்துக் கொள்ள வேண்டும்.

உதட்டை ஹைட்ரேட் செய்யக்கூடிய ஜெல் கிடைக்கின்றன. அதை அப்ளை செய்து உதட்டை ஹைட்ரேட்டிங்காக வைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு பெட்ரோலியம் ஜெல்லியையும் பயன்படுத்தலாம்.

​உதட்டுக்கு சன் ஸ்க்ரீன்

பலர் முகத்துக்கு சன் ஸ்க்ரீன்கள் பயன்படுத்துவதில்லை. இதில் உதட்டுக்கு சன் ஸ்க்ரீன் என்று ஒன்று இருக்கிறதா என்றே நிறைய பேருக்குத் தெரியாது.

சருமத்தைப் போலவே உதட்டுக்கும் சன் ஸ்கிரீன் மிக அவசியம். உதட்டுக்கென தனியே சன் ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

லிப் பாம் மற்றும் லிப்ஸ்டிக்குகளே சன் ஸ்கிரீன்கள் சேர்த்து வருகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். SPF30 மற்றும் அதற்கு மேல் இருப்பதை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

உதட்டை கடிக்காதீங்க

உதடு வறட்சி, உதட்டில் காயம், உதட்டு வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகய் யாருக்கு அதிகம் வரும் தெரியுமா? நாக்கால் அடிக்கடி உதட்டை ஈரமாக்கிக் கொண்டே இருப்பது, உதட்டை அடிக்கடி கடிப்பது போன்றவற்றால் தான்.

அதனால் உதடு ஈரப்பதத்துடன் மென்மையாகவும் கண்ணாடி போலவும் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் செய்யக்கூடாத முதல் தவறு உதட்டை கடிக்கக் கூடாது.

​செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன

உதடுகளை கடிப்பது, தோல் உரியும்போது அதை கைகளால் பிய்த்து விடுவது போன்றவற்றைச் செய்யக்கூடாது.

புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும். இது உதட்டின் தோலை அதிகமாக வறட்சியடையச் செய்யும். இதை தவிர்த்தாலே பளபளப்பான உதடுகளைப் பெற முடியும்.

நிறைய பேர் மேட் (matte) லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துகிறார்கள். அவற்றில் பெரும்பாலும் ஆல்கஹால், மெழுகு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இவை மேலும் உதடுகளை வறட்சியடையச் செய்யும்.

ரிசினோலிக் அமிலம், கொழுப்பு அமில எஸ்தர்கள், மெக்னீசியம், எஸ்டர் கம், குரோமியம் போன்ற அதிகப்படியான ரசாயனங்கள் இல்லாததாகத் தேர்வு செய்ய வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker