ஃபேஷன்அழகு..அழகு..உறவுகள்

ரோஸ் வாட்டரும் கிளிசரினும் சேர்த்து பயன்படுத்தினா பேரழகியா ஜொலிப்பீங்களாம்…. எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்…

ரோஸ் வாட்டரை நம்மில் பெரும்பாலானோர் சருமத்துக்குப் பயன்படுத்துவோம். அதேபோல சிலர் கிளிசரினையும் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த இரண்டையும் சேர்த்து சருமத்துக்குப் பயன்படுத்தும் போது அது உங்களுடைய சருமத்தில் வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்யும். இந்த இரண்டையும் என்னென்ன பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்தலாம், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.

சருமத்தை குழந்தையின் சருமத்தைப் போன்று மென்மையாகவும் பொலிவுடனும் வைத்திருக்க ரோஸ்வாட்டர், கிளிசரின் இரண்டுமே உதவி செய்யும். ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டி பாக்டீரியல், ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் மெல்லிய ஆஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தை மென்மையாக்க உதவி செய்கிறது. அதேபோல கிளிசரினில் உள்ள மாய்ஸ்ச்சரைஸிங் பண்புகள் சருமத்தை மென்மையாக்குகின்றன.

ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் இரண்டு சேர்த்து சருமத்துக்குப் பயன்படுத்தும் போது அது மிகச்சிறந்த மாய்ஸ்ச்சரைஸராகச் செயல்படுகிறது. இது மற்ற ரசாயனங்கள் கலந்த மாய்ஸ்ச்சரைஸருக்கு மிகச்சிறந்த மாற்று என்றே கூறலாம்.

இந்த மாய்ஸ்ச்சரைஸரை முகத்துக்கு மட்டுமின்றி உதடுகளுக்கும் பயன்படுத்தலாம். இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருக்கு ஒரு ஸ்பூன் கிளிசரின் என்கிற விகிதத்தில் பயன்படுத்துங்கள்.

கிளிசரின் ஒரு இயற்கையான ஹைட்ரேட்டிங் தன்மை கொண்டிருப்பதால் சருமத்தில் ஈரப்பதத்தைப் தக்க வைக்க உதவுகிறது. அதோடு நீரிழப்பை தடுத்து சருமத்துக்கு ஒரு பாதுகாப்பு அடுக்கை கொடுக்கிறது.

இவை இரண்டிலும் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் சருமத்தில் ஏற்படும் அழற்சி, எரிச்சல் உள்ளிட்டவற்றைப் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.

ரோஸ் வாட்டர், கிளிசரின் ஆகிய இரண்டிலும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இது சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், கருந்திட்டுக்கள், பிக்மண்டேஷன் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது.

ரோஸ் வாட்டர், கிளிசரின் இரண்டிலுமே ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் இருக்கின்றன. இவை பருக்கள் வராமல் தடுப்பதோடு ஏற்கனவே வந்த பருக்களையும் போக்கி பருக்களால் வந்த தழும்புகளையும் வேகமாக மறையச் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

சருமத்தின் வறட்சியைப் போக்கி மிகவும் மென்மையாக மாற்றக்கூடிய அறபுதமான வீட்டு வைத்தியம் என்று இதை சொல்லலாம்.

வறட்சி நீங்கனாலே இயற்கையாகவே சருமம் பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும்.

ரோஸ்வாட்டர் – கிளிசரின் ஸ்பிரே

தேவையான பொருள்கள்

ரோஸ்வாட்டர் – 100 மில்லி
கிளிசரின் – 1 ஸ்பூன்
கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
ரோஸ் எசன்ஷியல் ஆயில் – 1 ஸ்பூன்

செய்முறை

ஒரு பௌலில் ரோஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதோடு கற்றாழை ஜெல், கிளிசரின் மற்றும் எசன்ஷியல் ஆயிலைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

இப்போது ரோஸ்வாட்டர் கிளிசரின் ஸ்பிரே ரெடி. இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு அவ்வப்போது முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளலாம். இது மிகச்சிறந்த டோனராகவும் செயல்படும். சருமத்தை எப்போதும் நீர்ச்சத்தோடும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.

​ரோஸ்வாட்டர் – கிளிசரின் மாய்ஸ்ச்சரைஸர்தேவையான பொருள்கள்

ரோஸ்வாட்டர் – அரை கப்
கிளிசரின் – 1 ஸ்பூன்,
எசன்ஷியல் ஆயில் – 4 சொட்டுகள்,
லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன்

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ரோஸ்வாட்டரை சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்துங்கள். கொதிக்க வைக்க வேண்டாம். ரோஸ்வாட்டர் சூடாக இருக்கும்போதே அதில் எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

எலுமிச்சை சாறு நன்கு கலந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற விடுங்கள். பின்பு அதில் கிளிசரின் மற்றும் எசன்ஷியல் ஆயில் சேர்த்து மிக்ஸ் செய்தால் சூப்பரான மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்த ரெடி.

​ரோஸ்வாட்டர் – கிளிசரின் சீரம்

தேவையான பொருள்கள்

வைட்டமின் சி பவுடர் (அ) அஸ்கார்பிக் பவுடர் – 1 ஸ்பூன்
கிளிசரின் – 3 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 3 ஸ்பூன்

செய்முறை

ஒரு பௌலில் வைட்டமின் சி பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

இப்படி கலந்தால் ரோஸ்வாட்டர் – கிளிசரின் சீரம் தயார். இதை ஒரு கண்ணாடி சீரம் பாட்டிலில் சேகரித்து சூரிய ஒளி மற்றும் வெப்பம் இல்லாத இடத்தில் வைத்துப் பயன்படுத்துங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker