முகப்பருவை குறைக்க போராடுகிறீர்களா..? இந்த 5 உணவுப் பொருட்களை சாப்பிடுங்க.. உடனே பலன் தெரியும்..!
டீன் ஏஜ் வயதில் ஏற்படும் தொல்லைகளில் ஒன்று பிம்பிள். உடலியல் மாற்றம் மற்றும் ஹார்மோன் காரணமாக பொதுவாக முகப்பருக்கள் எழும். அது மட்டும் இல்லாமல் சருமத்தின் துளைகள் பாக்டீரியா அல்லது இறந்த சரும செல்களால் தடுக்கப்படும் போது, முகப்பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். இது சருமத்தை உலர்த்துவதைத் தடுக்கிறது,
இது சரும துளைகள் அடைப்புக்கு வழிவகுக்கிறது. முகப்பருவை எதிர்த்துப் போராட பல தோல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன. வீட்டில் உள்ள பொருட்கள், ரசாயனங்கள் என்று வெளியில் போட பல பொருட்கள் இருந்தாலும் முகப்பரு வருவதைத் தடுக்க நமது உணவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதும் அவசியம். முகப்பருவைக் குறைக்க உதவும் சில சூப்பர்ஃபுட்களை உங்களுக்கு சொல்கிறோம்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு: ரெட்டினோல் எனப்படும் வைட்டமின் சத்து முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதிலும் சுருக்கங்களைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. முகப்பருவை நீக்கும் எண்ணற்ற ரெட்டினோல் கிரீம்கள் மற்றும் சீரம்கள் சந்தையில் உள்ளன. ஆனால் அதை நேரடியாக உட்கொவது தான் சிறந்த பலனைத் தரும் அது சக்கரைவள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ளது.
எலுமிச்சை: எலுமிச்சை சாறு தளர்வான சருமத்தை இறுக்குவதற்கும், சருமத்தில் உள்ள கறைகளை மறைப்பதற்கும் உதவும். அதனால் ஜூஸ், சத்தம் , சாலட் என்று எதாவது ஒரு வகையில் எடுத்துக்கொள்வது நல்லது. ஜூஸ் பிழிந்த பின்னர் அதன் தோலை சருமத்தில் தேய்த்தால் முக்கால் ப்ளீச் செய்தது ம்=போல மாறிவிடும்.
பெர்ரி: நெல்லி, ஸ்ட்ராபெர்ரிகள், செர்ரிகள், ராஸ்பெர்ரிகள், அவுரிநெல்லிகள் மற்றும் ப்ளாக்பெர்ரிகளின் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளன. பெர்ரிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எரிச்சலூட்டும் கரும்புள்ளிகளுக்கு எதிராக செயல்படுகின்றன. சருமம் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு பரு வராமல் பாதுகாக்கவும் இவை உதவுகின்றன.
பப்பாளி: பப்பாளியில் வைட்டமின் ஏ, மற்றும் சி உள்ளன. அதோடு பப்பாளியில் பப்பேன் என்ற செரிமான நொதி உள்ளது. உங்கள் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள இறந்த சரும செல்களை வெளியேற்றவும், துளைகளை பராமரிக்கவும், முகப்பரு தழும்புகளைக் குறைக்கவும், சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும், வெடிப்புகள் ஏற்படுவதை நிறுத்தவும் உதவும். மேலும் சருமத்தில் சுருக்கம் வராமல் தடுக்கும்.
குயினோவா: அவை நார்ச்சத்து நிறைந்தவை, இதனால் நமது குடல் மற்றும் செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. குடல் அமைப்பின் சரியான செயல்பாடு தோல் மேற்பரப்பில் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க உதவும். அதனால் பருக்கள் வருவது குறையும்.