வயிற்றை சுத்தம் செய்து கழிவை வெளியேற்ற உதவும் பானங்கள்… தினமும் வெறும் வயிற்றி குடிங்க.. அப்புறம் தெரியும் ரிசல்ட்..!
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை பலர் சந்திக்கின்றனர். இப்போதெல்லாம் வெளியில் காரமான உணவுகள் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதால் அஜீரணம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியான இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில் வயிற்றின் செயல்பாடுகளை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கான முதல் படி காலையில் எழுந்ததும் நம் வயிற்றில் உள்ள கழிவுகளை சீராக வெளியேற்றுவது.. இதை சரியாக செய்தாலே நம் பாதி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். அந்தவகையில் உங்கள் வயிற்றி உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் இந்த பானங்களை தினமும் காலை எழுந்ததும் குடித்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
1. அஜ்வைன் தண்ணீர் : வெப்எம்டியில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரையின்படி, அஜ்வைன் தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதனை உட்கொள்வதால் வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அஜ்வைன் தண்ணீரை தொடர்ந்து உட்கொள்வது வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது. குறிப்பாக அதிகாலையில் வயிறு சுத்தமாகும். உங்களுக்கும் காலையில் உங்கள் வயிற்றை சுத்தம் செய்வதில் சிக்கல் இருந்தால், தினமும் அஜ்வைன் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. சீரக நீர் : சீரக நீர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் மேம்படும். சீரகத் தண்ணீரைக் குடிப்பதால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். சீரகத் தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும்.
3.தேன் மற்றும் எலுமிச்சை சாறு : தினமும் காலையில் தேனுடன் எலுமிச்சை சாறு குடித்து வந்தால், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சுத்தமாகும்.
4. நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள் : நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்திற்கு சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. கேரட், ஓட்ஸ், பேரிக்காய், பருப்பு, பீன்ஸ், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை உட்கொள்வதால் செரிமான மண்டலம் வலுவடையும். இவற்றை உட்கொள்வதால் வயிறு நன்கு சுத்தமாகும்.
5. கற்றாழை சாறு : மலச்சிக்கல் பிரச்சனையை போக்க கற்றாழை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடிக்கடி மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் கற்றாழை சாறு எடுத்துக்கொள்ளலாம். கற்றாழை சாற்றை சிறிய அளவில் குடிக்கத் தொடங்குங்கள். வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். கற்றாழை சாற்றை உட்கொள்வதால் வயிறு நன்கு சுத்தமாகும்.