ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்மருத்துவம்

உடல் பருமனால்தான் இந்த பிரச்சனையெல்லாம் வருதா..? இந்த 7 முக்கிய பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

உலகில் உள்ள பெரும்பாலானோர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். 2016-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில், 18 வயதிற்கும் மேற்பட்ட 1.9 பில்லியன் மக்கள் அதிக உடல் எடையோடு வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. அதில் 650 மில்லியன் மக்கள் உடல் பருமனோடு இருக்கிறார்கள். இந்த அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் அனைத்தும் 2021-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏன் உடல்பருமன் முக்கியமான உடல்நலப் பிரச்சனையாக உள்ளது? ஒரு தனிநபரின் உடல் எடை குறியீடு (BMI) 30-க்கு மேல் இருந்தால் அவர் உடல் பருமனாக இருக்கிறார் என்று அர்த்தம். ஒருவர் அதிக எடை இருக்கிறார் என்பதை BMI கொண்டே கணக்கிட்டு வருகிறார்கள். BMI 25-க்கு மேல் இருந்தால் அந்த நபரின் உடல் எடை அதிகமாக இருக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு தொற்றா நோய்கள் வரும் ஆபத்து அதிகம். 2025 ஆண்டிற்குள் தோராயமாக 167 மில்லியன் மக்கள் அதிக உடல் எடையோடு இருப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் மதிபிட்டுள்ளது.

இதயத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது : உடல் பருமன் நம் உடலில் உல்ள அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக இதயத்தில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. 2012-ம் ஆண்டு மாரடைப்பு மற்றும் இதய நோய் காரணமாக அதிக இறப்பு நேரிட்டதற்கு உடல் பருமன் முக்கிய காரணமாகும்.

சர்க்கரை அளவை பாதிக்கிறது : நீரிழிவு நோய் வருவதற்கு முக்கிய காரணமாக உடல் பருமன் இருக்கிறது. அதிக கொழுப்பு நம் உடலின் இடுப்பு பகுதியில் சேகரமாவதால் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் நம் உடல் போதுமான இன்சுலினை சுரப்பதில்லை. அதனையடுத்து உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைடரேட்ஸ்களை கரைப்பதில் சிக்கல் ஏர்படுகிறது. இதன் விளைவாக நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

உடலில் உள்ள எலும்புகள் மற்றும் இணைப்புகளை கடுமையாக பாதிக்கிறது: உடல் பருமனாக இருப்பதால் நமது எலும்புகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கீல்வாதம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் உடல் எடையோடு இருப்பதால் எலும்புகள் மற்றும் முக்கியமான இணைப்பு பகுதிகளான இடுப்பு மற்றும் முழங்கால்களில் வலி ஏற்படுகிறது.

புற்றுநோய் வருவதற்கு காரணமாக அமைகிறது- புற்றுநோய்க்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. கணையம், சிறுநீரகம், விதைப்பை, மார்பகம், உணவுகுழாய், பெருங்குடல் பகுதிகளில் புற்றுநோய் வருவதற்கு உடல் பருமனும் ஒரு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மன நலத்தை பாதிக்கிறது- மன நலத்திற்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு உள்ளது என உறுதியாக கூற முடியாவிட்டாலும், இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் ஏற்படுதல் மற்றும் சமூக அல்லது கலாச்சார காரணிகளும் இதற்கு காரணமாக இருக்கிறது. உடல் பருமனால் ஒருவரின் உடல் ஆரோக்கியம் ஏன் பாதிப்படைகிறதோ அதே காரணத்திற்காக தான் அவரின் மனநலமும் பாதிக்கப்படுகிறது.

கர்ப்பகாலத்தில் பிரச்சனை ஏற்படும் : மகப்பேறு சமயத்தில் உடல் பருமனாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படுவதோடு நீரிழிவு நோயும் வரக்கூடும். மேலும் ப்ரீ எக்லாம்சியா போன்ற நோய்கள் தாக்குவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

உடல் பருமனுக்கும் சுவாசக் கோளாறுகளுகும் தொடர்புள்ளது : உடல் பருமன் காரணமாக ஆஸ்துமா மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் என இரண்டு சுவாசப் பிரச்சனைகள் நம்மை தாக்குகின்றன. அதிக உடல் எடை இருப்பதால் நம் உடலின் சுவாச செயல்பாட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் பருமன் காரணமாக மார்பு பகுதியில் அதிக கொழுப்பு படர்வதால், நுறையீரலுக்குச் செல்லும் காற்றுப் பாதை சுருங்குகிறது. இதனால் சுவாசப் பிரச்சனைகள் வருகின்றன.

உடல் பருமனை குறைக்க என்ன செய்ய வேண்டும்- உடல் எடை குறைய வேண்டுமென்றால், அதற்கு நம் தினசரி பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். முறையான டயட், உடற்யிற்சி செய்தல், கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது, நிறைய காய்கறிகள், முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். உப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால் தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker